மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், இராநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் TNTJ வெப்மாஸ்டர் உட்பட பல தவ்ஹீத் சகோதரர்கள்; தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு திருவாடனையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
களத்தொகுப்பு சுருக்கமாக….
அரசாங்கத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.பி பட்டிணத்தில் உள்ள நமது மஸ்ஜிதுந்நூர் பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (31-7-2009) நடைபெற இருந்தது.
இதற்காக காலையில் இருந்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் தவ்ஹீத் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழ வந்திருந்தனர்.
சுமார் 11.00 மணி அளவில் தீடீர் என்று ஊர் சுன்னத் ஜமாஅத் காரர்கள் பள்ளிவாசல் முன் கூடி‘அவனுகள வெளிய வரசொல்லுங் இல்லன்னா உண்டு இல்லன்ன பன்னிடுவோம்’ என்று கூறிக் கொண்டு பள்ளிசால் முன் நின்று கொண்டிருந்த போலிசார் மீது கல் எரிந்தனர்.
இதில் ஒரு காவல் துறை அதிகாரிக்கு மண்டையில் இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டது.
ஊர் ஜமாஅத்தின் மிரட்டலுக்கும் பயந்தும் லஞ்சைத்தை வாங்கிக் கொண்டும். பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுது கொண்டிருந்த தவ்ஹீத் வாதிகளை போலீசார் பூட்ஸ்காளுடன் உள்ளே வந்து ‘பள்ளிவாசல விட்டு வெளியே போங்க இல்லன்ன நாங்க உங்கள வெளியப்போக வப்போம் என்று மிட்டினர்.
நமது நிர்வாகிகள், நாங்க எங்க சார் ஜும்ஆ தொழுவது என்று கேட்டதற்கு, அதல்லாம் எங்களுக்கு தெரியாது முதல்ல வெளியோ போங்க என்று அக்ரோஷமாக கத்தினர்.
பள்ளியின் கதவை திறக்க வில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டோ உடைத்தோ திறப்போம் என்றும் போலீசார் மிரட்டினர்.
நமது நிர்வாகிகளுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நமது நிர்வாகிகள், சார் இந்த பள்ளி அரசாங்க பதிவுப் படி தவ்ஹீத் ஜமாஅத்தின் பேயரில் உள்ளது. நாங்கள் எங்கள் இடத்தில் தொழுகின்றோம் நாங்கள் எந்த பிரச்சனையும் செய்யவில்லை எங்களை ஏன் ஜும்ஆ தொழு விடாமல் எங்களுக்கு சொந்தமான இடத்தை விட்டு வெளியே போக சொல்கின்றீர்கள் என்று கேட்டதற்கு,
போலிசார், “ஊர்ஜமாஅத் காரர்கள் நீங்கள் இங்கு தொழுதால் பிரச்சனை செய்வார்கள்” என்று பதில் கூறினர்.
அதற்கு நமது நிர்வாகிகள்,
சரி சார், நாங்கள் இன்று ஜும்ஆ தொழுதாக வேண்டும் எனவே அவர்களது பள்ளிக்கு நாங்கள் சென்று தொழுகின்றோம் அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களையும் பள்ளிவாசலை விட்டு வெளியேற்றுவீர்களா? என்று நியாத்தோடு கேட்டதற்கு, இங்கு நியாயம் அநியாயம், உங்கள் உரிமையை பற்றி யெல்லாம் பேசக்கூடாது முதல்ல பள்ளிவாசல விட்டு வெளியே போங்க என்று போலீசார் தொடர்ந்து அநியாயமாக மிரட்டினர்.
நமது நிர்வாகிகள் வெளியே போக மறுத்ததால் மாநிலப் பொதுச் செயலாளர் உட்பட அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களை கை செய்து போலீசார் வேனில் ஏற்றினர்.
சட்டத்திற்கு முரணாக போலிசாரின் மீது கல் எரிந்து போலீசாரின் மண்டையை உடைத்த ஊர்ஜமாஅத்தினரை பாதுக்காப்புடன் அவர்ளது பள்ளிவாசலுக்கு அனுப்ப வைத்த காவல் துறையினர் TNTJ விற்கு சொந்தமான பள்ளியில் அரசாங்க அனுமதியோடு தொழு வந்திருந்தவர்களை தொழவிடால் தடுத்து குண்டுக்கட்டாக கைது செய்யதுள்ளனர். மேலும் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டுள்ளனர்.
சம்வபத்தை கேள்வி பட்ட நம் சகோதரர், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் சூழ்ந்தனர்.
காவல் துறையினர் அநியாகத்தின் உச்ச கட்டத்திற்கு சென்று விட்டதை அறிந்து கொந்தெலித்து எழுந்தனர்.
மேலான்மைக்குழு உறுப்பினரான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாகள் கைது செய்யபட்டு இருந்த இடத்திற்கு வந்து சூழ்ந்திருந்தவர்களை அமைதிபடுத்தி, இலஞ்சைத்தை வாங்கிக் கொண்டு நியாத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து அதிகாரிகளின் சட்டயை கழட்டாமல் தவ்ஹீத் ஜமாஅத் விடாது என்று கூறி டிஎஸ்பி அலுவலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கில் நம் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளளனர்.
இது மதியம் 2.31 வரை உள்ள நிலவரம்….
மேற்படி விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக