சனி, 25 ஜூலை, 2009

பாபர் பள்ளி ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

rmd-_24-07-2009-6rmd-_24-07-2009-8rmd-_24-07-2009-9rmd-_24-07-2009-1உத்திரப்பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித் நிலவக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இப்படிப்பட்ட முக்கியமான கோப்புகள் காணாமல் போனால் இந்திய நாட்டில் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், மறைக்கலாம் என்ற நிலை உருவானால் சிறுபான்மை பிரிவு மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கும் வகையில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக நேற்று (24-7-2009) அரசு மணினை முன்பு மாலை 5 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மாநிலப் பொருளாளர்சாதிக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக