பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் வரும் இன்று (21-7-2009) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். மேலும் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், மாநிலச் செயலாளர் இப்ராஹீம், கானத்தூர் பஷீர், மாநிலப் பொருளாளர் சாதிக்ஆகியோர் கலந்து கொண்டு முனனிலைவகித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். தடையை மீறி நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை மாவட்ட / ம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக