சீனாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை கலவரத்தில் 140 பேர் ப
உரும்கி (சீனா): சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில்,
முஸ்லீம்களான உயிகுர் இனத்தவருக்கும், சீனர்களான ஹான் பிரிவினருக்கும்
இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.
கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக்
கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில்,
நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57
பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில்
உயிரிழந்தனர்.
சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.
வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம்
குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப்
பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது
பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக