தன்டனைகளை கடுமைப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் TNTJ நிர்வாகிகள் ஆலோசனை!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, July 10, 2009,
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் கடந்த 8-7-2009 அன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டதிற்கு TNTJ நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் TNTJ சார்பாக திருவள்ளூர் மாவட்ட TNTJ நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு,தன்டனைகளை கடுமைபடுத்தினால் குற்றங்கள் குறையும் என்ற அடிப்படையில் விபரச்சாரத்திற்கு எதிராகவும், ஓரினச் சேர்கைக்கு எதிராகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தலைவர்யூசுப் மற்றும் செயலாளர் ஆவடி இப்ராஹீம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக