சனி, 25 ஜூலை, 2009

அபுதாபியில் நடைபெற்ற தர்பியா முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, July 25, 2009, 11:57

abu-dhabi-darbiyaஅல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) தின் நிர்வாகிகளுக்கான ஒழுக்கப் பயிர்ச்சி (தர்பியா)நிகழ்ச்சி அதன் கிளையான ஐகாட் சிட்டியில் 10/07/2009 அன்று நடைபெற்றது.

இதில் துபை மண்டல பொதுச் செயலாளர்சகோ:முஹம்மது நாசர் தவ்ஹீத் வாதிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் மற்றும் தவ்ஹீத் வாதிகள் அனைத்து விஷயங்களிலும் மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும் உதாரணமாக: (திருமணம் மற்றும் தனது குடும்பத்தில் நடைபெருகின்ற மார்கத்திற்கு முரணாண காரியத்தில் ஈடுபடுவதை) குர்ஆன் ,ஹதீஸ் ஒளியில் சிறப்புரை நிகழ்தினார்.

இதை தொடர்ந்து அமிரக ஒருங்கிணைப்பாளர் சகோ:ஹாமின் இபுராஹீம் இயக்கங்களும்,நாமும் என்ற தலைப்பில்; இன்றைய இயக்கங்கள் மத்தியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித் தன்மை குறித்து மிகவும் அழகான முறையில் விளக்கினார்கள்.

மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து சகாதரர்களுக்கும் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை கடைபிடிக்க வேண்டிய பிரார்த்தனைகளின் தொகுப்பு மற்றும் செயல்கள் யாவும் இறைவனுக்கே என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் எம்.ஐ.சுலைமான் அவர்களின் சிறப்புரை அடங்கிய குறந்தகடு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக