சனி, 25 ஜூலை, 2009

நெல்லை எம்.பி யிடம் மேலான்மைகுழு தலைவர் மனு!


45-1கடந்த 24-06-2009 அன்று பிற்பகல் 1.00 மணியள வில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்குநெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள் நேரில் வருகை தந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது டிஎன்டிஜே மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல் லுஹா ரஹ்மானிஅவர்கள் மேலப்பாளைய நகரத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சமுதாய நலன்கள் குறித்து கோரிக்கை மனுவை எஸ்.எஸ். ராமசுப்புஅவர்களிடம் வழங்கினார்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். இச்சந்திப்பின்போது டிஎன்டிஜே மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான் பிர்தவ்ஸி, மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலிஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக