வெள்ளி, 31 ஜூலை, 2009

அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகார் செய்யுங்கள்

அரசு அலுவலகங்களில் லஞ்சமா? உடனே புகார் செய்யுங்கள்
மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி அதன் ஊழியர்களின் சம்பளம்,சலுகை,ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக செலவாகிவிடும் போது, கொஞ்சம் கூட நன்றியுணர்வு இல்லாத அரசு ஊழியர்கள் அப்பாவி ஏழை எளிய மக்களை வதைத்து லஞ்சம் வாங்குவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இது குறித்து விழிப்புணர்வு பொது மக்களிடம் நிறைய ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் எவராவது லஞ்சம் கேட்டால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்சம் ஒழிப்பு கண்காணிப்பாளரின் 044-28273186, 044-28270942 ஆகிய தொலைபேசி எண்களிலும் 9840049224 என்ற அவருடைய செல்பேசி எண்னிலும் எஸ்.எம்.ஏஸ் புகார் தெரிவிக்கலாம்.

044-28213828 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேக்ஸ் மூலமாகவும் தகவல் தரலாம். அதுபோல் மாநில அரசு ஊழியர் எவராவது லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்தால் சென்னையில் உள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் உள்ள 044-24615989, 044-24615949 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

லஞ்சம் நமது நாட்டை பிடித்துள்ள பெரிய நோய் இந்த நோயை விரட்ட ஒவ்வொருவரும் முயல வேண்டும். லஞ்ச புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை ரகசியமாக வைக்கப்படும். அதனால் பயம் ஏதுமின்றி புகார் தெரிவித்து நாட்டு பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக