திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நியூ யார்க் நகர பள்ளிகளுக்கு பெருநாள் விடுமுறை: நியூ யார்க் மாநகர சபை தீர்மானம்

நியூ யார்க் நகர பள்ளிகளுக்கு பெருநாள் விடுமுறை: நியூ யார்க் மாநகர சபை தீர்மானம்இஸ்லாமியர்களின் மூன்று வருட கடின முயற்சிக்குப்பின், தற்போது நியூ யார்க் நகர மாநகர சபை இஸ்லாமிய பெருநாளான ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா விற்கு அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இது அங்குள்ள இஸ்லாமியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. அங்கு தற்போது கிருத்துவ மற்றும் யூத பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுவரை இஸ்லாமிய பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. வார நாட்களில் பண்டிகை வந்தால் குழந்தைகள் சீக்கிரமாக தொழுதுவிட்டு பள்ளிகளுக்கு விரைந்து ஓடும் காட்சி பரிதாபகரமானது. இந்த தீர்மானம் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அங்குள்ளவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

நியூயார்க் நகரில் சுமார் 12% இஸ்லாமிய மாணவர்கள் படிப்பதாக அங்குள்ள வழக்கறிஞர்களின் புள்ளி விபரம் கூறுகிறது. இதை இன்னும் மேயர் ப்ளூம்பெர்க் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் ஒப்புதல் அழிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் செய்தி: எஸ்.ஜாஃபர் அலி phd


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக