ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

புரைதா கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய முருகன்

புரைதா கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய முருகன்!புரைதா கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய முருகன்!புரைதா கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய முருகன்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.08.2009 அன்று வ.n.வ.த.மண்டல தலைமை அலுவலகத்தில்
‘சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மௌலவி அஸதுல்லா ஜமாலி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக காரைக்கால் நிரவியைச்சேர்ந்த திருமுருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்.

முருகன் என்ற தன்பெயரை முஹம்மது ரியாஸ் என்று மாற்றிக்கொண்டார். நிகழ்ச்சிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் அல்கஸீம் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட இரண்டாம் ஆண்டு ரமலான் சிறப்பு மலர் புத்தகமும், ஃபித்ரா பற்றிய பிரசுரமும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சிற்கான அனைத்து ஏற்பாட்டையும் TNTJ புரைதா கிளை சிறப்பான முறையில் செய்திருந்தன.


கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி


ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி




27-08-09வியாழன் இரவு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுவர் ஜியாவுதீன் அவர்கள் " திருகுர்ஆன் திருமறையை தினமும் ஓதுங்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாயிக் அவர்கள் "ரமலான் தரும் பாடம்" என்ற தலைப்பிலும் ,மௌலவி லாபிர் மதனி அவர்கள் " உறவை பேணுதல்" என்ற தலைப்பிலும் மௌலவி அன்ஸார் அவர்கள் " உணர படாத தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். " பித்ரா எனும் தர்மம் " என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். ஒவ்வரு சொற்பொழிவுக்கு பின்னர் , சிறுவர் சிறுமியர்கள் குர்ஆனிலிருந்து தங்களுக்கு தெரிந்த சூராக்களை ஓதினார்கள். இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் நடத்தினார்கள். சகோதரர் மஸ் ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். இரவு 10:30 மணிக்கு தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் விறுவிறுப்போடு நடைபெற்றது . வருகை தந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் ......

தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்

வடபழினியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

வடபழினியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வடபழினி கிளை சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைசாலிகிராமம் , மஜீத் நகர் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது. கிளை நீர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மாவட்டம் அருர் கிளையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!

தர்மபுரி மாவட்டம் அருர் கிளையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் அருர் கிளை சார்பாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பிலும்கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது. மாவட்ட நீர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.


வியாழன், 27 ஆகஸ்ட், 2009

அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!

நாள் Monday, August 24, 2009, 17:26

அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபியில் நடைபெற்ற ரமளான் மாத சிறப்பு சொற்பொழிவில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி!அபுதாபி TNTJ முஸ்ஸஃபா கிளை கிளின்கோ ‘C’ கேம்ப் பள்ளியில் வைத்து கடந்த 20.08.09 வியழான் அன்று மாபெரும் ரமாலான் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார், அதை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள TNTJ மாநில பேச்சாளர் மௌலவி அப்துல் கரிம் அவர்கள் அருட்கொடைகளை அள்ளித்தரும் ரமலான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,

இந்த நிகழ்ச்சி சரியாக இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கபட்டது இந்த நேரம் மக்கள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் நேரமென்றாலும் அதை பொருட்படுத்தாமல் முஸாஃபா, அபுதாபி, ஐகாட் பகுதிலிருந்து சுமார் 175-க்கு மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை முஸ்ஸஃபா கிளை தலைவர் முஹம்மது கனி தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்திpருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன்வந்து தன்னுடைய வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்று கொண்டார்,

அவருக்கு மௌலவி அப்துல் கரிம் அவர்கள் ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுத்து அவர் தன் பெயரை அப்துர் ரஹ்மான் என்று மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்

TNTJ RAHMATH NAGAR MASJID

மங்களுர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியத் தடை- கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

மங்களுர் கல்லூரில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியத் தடை- கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி நடைபெறுவதால் பாசிச சக்திகள் பல வகைகளில் ஆட்டம் போட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மங்களுரில் உள்ள ஒரு கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஃபர்தா அணிய தடைவிதித்துள்ளது.

மங்களூரில் ஸ்ரீ வெங்கட்ராமனா சுவாமி கல்லூரி என்ற ஒரு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை பந்த்வால் என்ற ஊரில் உள்ள எஸ்.வி.எஸ். வித்யவர்த்தகா சங்கம் நடத்தி வருகிறது. இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்.

இந்த கல்லூரில் முதலாமாண்டு பி.காம் படிப்பவர் ஆயிஷா ஆஸ்மின். இந்த சகோதரரி ஃபர்தா அணிந்து முகத்தை மூடியபடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதையடுத்து இவரை அழைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் சீதாராம மய்யா, முகத்தை மூடியபடி வகுப்புகளுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இந்த கல்லூரியில், சமீப காலமாக ஃபர்தா மற்றும் முகத்தை மூடியபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இந்தத் தடையால் கடந்த பத்து நாட்களாக நான் வகுப்புகளுக்குப் போக முடியாவில்லை” என்று இந்த சகோதரி கூறியுள்ளார். மேலும், இந்த சகோதரி கூறுகையில், “ஜூலை 11ம் தேதி கல்லூரியில் சேருவதற்காக நேரடித் தேர்வுக்கு வந்தபோது கூட நான் ஃபர்தாவில்தான் வந்தேன். அப்போது யாரும் அதை ஆட்சேபிக்கவில்லை. இப்போது இப்படி தடை விதித்திருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது” என்றார்.

ஃபர்தா அணிய தடை விதிக்கப்பட்டதால், இந்த சகோதரி சுடிதார் அணிந்து, தனது தலையை ஸ்கார்ஃப் அணிந்து மறைத்து வந்துள்ளார். இதை பொறுக்க முடியாத பாசிச கல்லூரி நிர்வாகம், இதற்கும் தடைவிதித்துள்ளது. மேலும், இந்த சகோதரியின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கையும் செய்துள்ளது.

இந்த தடையால், இந்த சகோதரி கல்லூரிக்கு போக முடியாத நிலையில் உள்ளார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற தேர்வையும் எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் தான் இப்படி பாசிச ஆட்டம் போடுகின்றது என்றால், இந்த சகோதரியுடன் பயிலும் சக மாணவிகள், “நீ ஸ்கார்ஃப் அணிந்து வந்தால், நாங்கள் காவி ஸ்கார்ஃப் அணிந்து வருவோம்” என்று தங்களின் காவி சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர் மய்யா, கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவின்படி தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

இதற்கிடையில், கல்லூரி மாணவ, மாணவியருக்கென உடைக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்று மங்களூர் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தி, இந்த காவிகளின் வெறி செயலை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்களை போக பொருளாக மாற்றும் ஆறைகுறையான ஆடைகளை தடை செய்ய வக்கில்லாத இந்த கல்லூரி, பெண்களை கண்ணியமாக மதிக்க இஸ்லாம் வழங்கியுள்ள கண்ணியமான ஆடையான ஃபர்தாவை தடை செய்து தனது பாசிச வெறியை வெளிப்படுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் இந்த கல்லூரி பாசிச வெறியை முஸ்லிம்களிடம் காட்டுவதும், அரசு இதை வேடிக்கை பார்ப்பதும் வேடிக்கை உள்ளது.

இதற்கிடையில், மங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களையும் இந்த தடை சம்பந்தமாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு பிறகு கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்காக ஆடைகள் சம்பந்தமான விதிகள் மாநில அரசிற்கு பரிந்துரை செய்ப்படுவதாக தெரிகிறது.

இதற்கிடையில், மெளலானா வகிதுத்தீன் கான் என்ற அரைவேட்காடு மார்க்க அறிஞர் (?), “ஃபர்தா அணிவது இஸ்லாத்தில் உள்ள விஷயம் இல்லை” என்று கூறி, தனது மார்க்க அறிவை நிருபித்துள்ளார். எறிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல், இந்த அரைவேட்காடு மார்க்க அறிஞரின் கருத்து உள்ளது. முஸ்லிம்கள் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத வரை இது போன்ற பிரச்சினைகளை எற்படுவதை தடுக்க முடியாது.

கல்லூரி நிர்வாகம் இந்த தடையை விளக்கவில்லையென்றால், எதிர்வரும் 28.08.2009 அன்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்த, TNTJ வின் அங்கமான கர்நாடக தவ்ஹீத் ஜமாத் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த அடாவடித்தனத்தை கண்டித்து பத்திரிக்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளது. கர்நாடக கவர்னரிடமும் இந்த தடை சம்பந்தமாக மனு கொடுக்க கர்நாடக தவ்ஹீத் ஜமாத் திட்டமிட்டுள்ளது.

பாசிச சிந்தனை கொண்ட இது போன்ற கல்லூரிகளை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என கர்நாடக தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.

செய்தி சேகரிப்பு: கர்நாடக தவ்ஹீத் ஜமாத் செய்தி குழு, பெங்களு

உணர்வு, ஏகத்துவம், தீண்குலப் பெண்மணி ரமளான் மாத சிறப்பு சலுகை

உணர்வு, ஏகத்துவம், தீண்குலப் பெண்மணி ரமளான் மாத சிறப்பு சலுகை!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, August 26, 2009, 12:28

உணர்வு:
ரூ 400 ஆக இருந்த ஆண்டுச் சந்தா (உள்நாடு) தற்போது: ரூ 320/-

தீண்குலப் பெண்மணி:
ரூ100 ஆக இருந்த ஆண்டுச் சந்தா தற்போது ரூ 90/-

ஏகத்துவம்:
ரூ100 ஆக இருந்து ஆண்டுசந்தா தற்போது ரூ 90/-

தொடர்புக்கு: 9842199976

சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, August 26, 2009, 20:16

சேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமாசேலத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒரு நாள் இஜ்திமாதமிழ்நாடு நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக மாபெரும் ஒரு நாள் பெண்கள் மார்க்க
விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 23.08.09 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை
சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெற்றது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேரடி நிர்வாகத்தில் நடைபெறும் சேலம் தவ்ஹீத் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சேலம் பச்சப்பட்டி தவ்ஹீத் மதரஸா ஆசிரியை, மாணவிகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தினார்கள்.

குறிப்பாக ஜனாஸா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்கம் சேலம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!


ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!ஆலங்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 16-8-2009 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு டி.எஸ்.பி மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பலர் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்

ஹஜ் ஒதுக்கீட்டில் முறைகேடு - தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியி்ட்டுள்ள ஆதாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, August 27, 2009, 15:32

ஹஜ் ஒதுக்கீட்டில் முறைகேடு - தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியி்ட்டுள்ள ஆதாரம்TNTJ.NET பிரத்யேக செய்தி:

இந்த வருடத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதை ஆதாரத்தோடு ஒரு தனியார் தொலைகாட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தி உள்ளது. அத்தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்ட ஆதாரத்தில் பெரும்பாலான தனியார் ஹஜ் சேவை நிறுவனத்திற்கு 150 ஒதுக்கீடுகளும் (சராசரியாக தனியார் நிறுவனங்களுக்கு 165 ஒதுக்கீடு) , அல்ஹிந்து (http://www.alhindonline.com/) எனப்படும் கேரள ஹஜ் நிறுவனத்திற்கு மட்டும் மிக மிக அதிக அளவில் சராசரியை விட பதினொரு மடங்குக்கும் மேலாக 1700 ஒதுக்கீடுகளும் தரப்பட்டுள்ளது பட்டவர்தனமாகியுள்ளது.

மேலும் பல சேவை நிறுவனங்களுக்கு ஹஜ் கோட்டாக்களே வழங்கப்படவில்லை என்பதால் அந்த நிறுவங்கள் புகார்கள் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சவுதி அரசாங்கம் ஒரு நிறுவனத்திற்கு 600௦௦ ஒதுக்கீட்டிற்கு மேல் வழங்கப்படக்கூடாது என்று இருந்தும் 1700 ஒதுக்கீடு கொடுத்தது பதிலளிக்கப்படாததாகவே உள்ளது.

ஆதாரம்:

http://www.tntj.net/wp-content/uploads/2009/08/haj_pilgrimage_1953_01.jpg

இது பற்றி தற்போதய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், இதைப்பற்றி ஒய்வு பெற்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்படும் என்பதை ஒப்புக்கொண்டாலும், தற்போது ஹஜ்ஜுக்கான வேலைகளை செய்யவேண்டியுள்ளதால் அதற்க்கு குறைந்த காலங்களே உள்ளதால் (சவுதி அரசு ஹஜ் பயணிகளுக்கு விசா கட்டாயப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது) ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற மழுப்பலான பதிலைத்தந்துள்ளார்.

மேலும், இதற்க்கு முன்னால் மத்திய மந்திரி இ. அகமது காரணம் என்று நம்பப்படுகிறது ( இவரும் கேரள மாநிலத்தைச்ச்சர்ந்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்) , அனால் அதை மறுத்துள்ள அவர் அதே நேரத்தில் அல்ஹிந்து நிறவனத்தின் சேவை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

அல்ஹிந்து நிறுவனத்தில் ஒரு ஹஜ் யாத்ரிகருக்கு 2 லட்சத்திற்கும் மேல் வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது (இந்த வருடம் மொத்தம் ஏறக்குறைய 35 கோடி வசூலிக்கலாம் அல் ஹிந்து நிறுவனம்). ஹஜ் கம்மிட்டியில் விண்ணப்பித்து தொடர்ந்து 4, 5 வருடங்கள் ஏமாறுபவரும் இன்னும் உண்டு என்னும் வேலையில் இது போன்ற புனித காரியங்களிலும் அரசு மக்களிடம் விளையாடுவது முஸ்லிம்களை மிகவும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அரசு இனியாவது ஹஜ் கம்மிட்டியை ஒழுங்கு படுத்துமா?…

செய்தி: அல்மதராஸி
(இணையதள செய்திளாளர்)

விளக்க விடியோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் சமுதாய சீர்திருத்த பணிகளின் விடியோ தொகுப்பு:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் சமுதாய சீர்திருத்த பணிகளின் விடியோ தொகுப்பு:


image

சனி, 22 ஆகஸ்ட், 2009

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை, ஸ்தம்பித்து போன சென்னை அண்ணா சாலை! - பத்திரிக்கைச் செய்தி!

S.P பட்டினப் பள்ளியை மீட்க நடந்த முதல்வர் வீட்டு முற்றுகை அதிகாரிகளையும் பொது மக்களையும் அதிரும்படியும் அசர வைக்கும் படியும் நடந்தது.

கொட்டும் மழையில் எங்கே இவ்வளவு மக்கள் வரப்போகிறார்கள் என்று காவல் துறையும் மற்ற அதிகாரிகளும் நினைத்து அவர்கள் கொண்டு வந்த கைது வாகனங்களின் எண்ணிக்கையில் தெள்ளதெளிவாக தெரிந்தது.

‘என்னையா இவ்வளவுதான் வேன் கொண்டு வந்தீங்களா?’ என்று உயர் அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரிகளை கடிந்து கொண்டது ஆளும் வர்க்கத்தில் உள்ள சில்லரைகள் இம்முற்றுகைப் போராட்டதை குறு மதிப்பிட்டதை பட்டவர்த்தனமாக காட்டியது.

காலை பதினொரு மணியளவில் தொடங்கி மூன்று மணி வரை போராட்டம் நீடித்தது. காலை பதினொரு மணிக்கெல்லாம் கைதுப்படலம் ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் சகோதர சகோதரிகளை கைது செய்யச் செய்ய, மறுபக்கம், சகோதர சகோதரிகள் வந்து கொண்டிருந்தது காவல் துறையை கடுப்பில் ஆற்றியது.

மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் அண்ணா சாலையை அடைத்து விட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் விடும் போது, அங்கிருந்த உயர் அதிகாரிகளின் முகம் கலை இழந்து காணப்பட்டது.

தினமலரில் 18-8-2009 அன்று வெளியான செய்தி..

பாதையை மூடியவுடம் நம் சகோதரர்கள் கொட்டும் மழை என்றும் பார்க்காமல் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்தது நம்சகோதரர்களின் அழுத்தமான உணர்வைக்காட்டியது.

காவல்துறை திக்குமுக்காடிப்போனது. ஒரு புறம் கைது நடவடிக்கை நடந்து கொண்டே இருந்தது, மறுபுறம் சகோதரர்கள் மழையில் தொப்பென்று நனைந்ததையும் பொருட்படுத்தாது உரிமைக்கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

அதை அண்ணா சாலையின் மறுபுறமிருந்து சென்ற வாகனங்களில் இருந்த பயணிகள், பேருந்து பயணிகள் ஹார்ன் செய்தும், கை தூக்கிக் காட்டியும் அவர்களின் ஆதரவை அளித்தது கண் கொல்லாக்காட்சியாக இருந்தது.

மேலும் இது நமது சகோதரர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதாக இருந்தது. காவல் துறையை கண்டித்து கோஷமிட்ட போது இஸ்லாமியர்கள் அல்லாத பயணிகளின் முகத்திலும் ஒரு புண் சிரிப்பு வந்தது, இது சென்னை குடிமக்களும் பல விஷயங்களில் காவல்துறையால் பாதிக்கப்பட்டதை காட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிறு குழந்தைகளும், இஸ்லாமிய சகோதரிகளும், S.P. பட்டினப் பள்ளியை மூடியதை எதிர்த்து கொட்டும் மழையிலும் வீரமுழக்கம் இட்டது, அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.

மூன்று மணிவரை இந்தக்கைதுப்படலம் தொடர்ந்து கொண்டே இருந்தது (பதினொரு முதல் மூன்று மணிவரை தொடர்ந்து கைது செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை தங்களின் கணக்கிர்கே விட்டு விடுகிறோம்).

சகோதர சகோதரிகளை முதல்வர் வீட்டு முன் வரை செல்லவிடாமல் தடுத்தாலும் கோபாலபுரம் ரோட்டில் வாகன நெரிசலால் வெறும் வாகனங்களாகவே காணப்பட்டது, ஆகா முதல்வர் வீட்டு முன் வாகன முற்றுகை இட காரணமாக நமது முதல்வர் வீட்டு முற்றுகை அமைந்ததை யாரும் மறுக்க முடியாது.

தமிழக அரசும் காவல் துறையும் இனிமேலாவது பாடம் பெறுமா?..

எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மிடம் நம்பள்ளியை விரைவில் பெற அருள்புரிவானாக.

-அல்மதராஸி (இணையதள செய்தியாளர்)