S.P பட்டினப் பள்ளியை மீட்க நடந்த முதல்வர் வீட்டு முற்றுகை அதிகாரிகளையும் பொது மக்களையும் அதிரும்படியும் அசர வைக்கும் படியும் நடந்தது.
கொட்டும் மழையில் எங்கே இவ்வளவு மக்கள் வரப்போகிறார்கள் என்று காவல் துறையும் மற்ற அதிகாரிகளும் நினைத்து அவர்கள் கொண்டு வந்த கைது வாகனங்களின் எண்ணிக்கையில் தெள்ளதெளிவாக தெரிந்தது.
‘என்னையா இவ்வளவுதான் வேன் கொண்டு வந்தீங்களா?’ என்று உயர் அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரிகளை கடிந்து கொண்டது ஆளும் வர்க்கத்தில் உள்ள சில்லரைகள் இம்முற்றுகைப் போராட்டதை குறு மதிப்பிட்டதை பட்டவர்த்தனமாக காட்டியது.
காலை பதினொரு மணியளவில் தொடங்கி மூன்று மணி வரை போராட்டம் நீடித்தது. காலை பதினொரு மணிக்கெல்லாம் கைதுப்படலம் ஆரம்பித்தாலும் ஒரு பக்கம் சகோதர சகோதரிகளை கைது செய்யச் செய்ய, மறுபக்கம், சகோதர சகோதரிகள் வந்து கொண்டிருந்தது காவல் துறையை கடுப்பில் ஆற்றியது.
மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் அண்ணா சாலையை அடைத்து விட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் விடும் போது, அங்கிருந்த உயர் அதிகாரிகளின் முகம் கலை இழந்து காணப்பட்டது.
பாதையை மூடியவுடம் நம் சகோதரர்கள் கொட்டும் மழை என்றும் பார்க்காமல் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்தது நம்சகோதரர்களின் அழுத்தமான உணர்வைக்காட்டியது.
காவல்துறை திக்குமுக்காடிப்போனது. ஒரு புறம் கைது நடவடிக்கை நடந்து கொண்டே இருந்தது, மறுபுறம் சகோதரர்கள் மழையில் தொப்பென்று நனைந்ததையும் பொருட்படுத்தாது உரிமைக்கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
அதை அண்ணா சாலையின் மறுபுறமிருந்து சென்ற வாகனங்களில் இருந்த பயணிகள், பேருந்து பயணிகள் ஹார்ன் செய்தும், கை தூக்கிக் காட்டியும் அவர்களின் ஆதரவை அளித்தது கண் கொல்லாக்காட்சியாக இருந்தது.
மேலும் இது நமது சகோதரர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதாக இருந்தது. காவல் துறையை கண்டித்து கோஷமிட்ட போது இஸ்லாமியர்கள் அல்லாத பயணிகளின் முகத்திலும் ஒரு புண் சிரிப்பு வந்தது, இது சென்னை குடிமக்களும் பல விஷயங்களில் காவல்துறையால் பாதிக்கப்பட்டதை காட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சிறு குழந்தைகளும், இஸ்லாமிய சகோதரிகளும், S.P. பட்டினப் பள்ளியை மூடியதை எதிர்த்து கொட்டும் மழையிலும் வீரமுழக்கம் இட்டது, அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
மூன்று மணிவரை இந்தக்கைதுப்படலம் தொடர்ந்து கொண்டே இருந்தது (பதினொரு முதல் மூன்று மணிவரை தொடர்ந்து கைது செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை தங்களின் கணக்கிர்கே விட்டு விடுகிறோம்).
சகோதர சகோதரிகளை முதல்வர் வீட்டு முன் வரை செல்லவிடாமல் தடுத்தாலும் கோபாலபுரம் ரோட்டில் வாகன நெரிசலால் வெறும் வாகனங்களாகவே காணப்பட்டது, ஆகா முதல்வர் வீட்டு முன் வாகன முற்றுகை இட காரணமாக நமது முதல்வர் வீட்டு முற்றுகை அமைந்ததை யாரும் மறுக்க முடியாது.
தமிழக அரசும் காவல் துறையும் இனிமேலாவது பாடம் பெறுமா?..
எல்லாம் வல்ல அல்லாஹ், நம்மிடம் நம்பள்ளியை விரைவில் பெற அருள்புரிவானாக.
-அல்மதராஸி (இணையதள செய்தியாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக