குர்ஆன், ஹதீஸ் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
வீண் பகட்டை விரும்பாது எளிமையோடும், அடக்கத்தோடும் செயல்படும் மாநில நிர்வாகத்தைப் பெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
கொண்ட கொள்கையில் தெளிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் அந்தக் கொள்கையை விமர்சிக்கும் எவரிடத்தும் விவாதித்து, உண்மையை நிரூபிக்கும் உறுதி கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
மார்க்கப் பணிகள் மட்டுமே இஸ்லாம் போதிக்கும் அடிப்படை என்றில்லாமல், மனிதர்களுக்கும் சேவை செய்வதும் இறை பணியே என்பதை முஸ்லிம் சமுதாயத்தில் விதைத்து, அதை செயல்வடிவிலும் வீரியத்துடன் செய்து கொண்டிருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் தூய வடிவில் முஸ்லிம்களுக்கு சென்றடைய வேராய், தூணாய் விளங்கும் மார்க்க அறிஞர்களை தரமாக உருவாக்கும் பணியில் சிறந்த கல்விக் கூடங்களை நடத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்பதை பிற மதத்தவருக்கு கண்ணியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எடுத்துரைத்த இஸ்லாத்தை ஏற்கவும், களங்கம் நீக்கவும், செய்யும் பணியில் பிற அமைப்புகளுக்கு முன்னோடியாய் விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இஸ்லாத்தை விரும்பி ஏற்றவரும், விருப்பத்தினால் இஸ்லாத்திற்கு வந்தவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா சென்டரில் பயின்று வந்தால் பின்னாளில் மனைவியை (தக்க காரணத்தோடு) விவாகரத்து செய்தாலும் இந்த மார்க்கத்தை விவாகரத்து செய்யாத உறுதி கொடுக்கும். தாஃவா பணிகள் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
சுனாமி பேரிடர் நிதி, ஃபித்ரா போன்ற பொருளாதாரங்கள் பெரிய அளவில் ஜமாஅத்திற்கு வந்த நிலையில் அதை முறையாக செலவிட்டு, கணக்குகளை பகிரங்கமாக வெளியிட்டு, ஜமாஅத்தின் நாணயத்தையும், தூய்மையையும் நிரூபிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
தவறிழைத்தவர் எவராக இருந்தாலும், கொள்கை காக்க தூக்கி எறியும் துணிவு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஜமாஅத்தின் அடிப்படையை தகர்த்து வெறியேற்றப்பட்ட பலர் கொள்கையை விட்டு விரண்டோடி தவ்ஹீதுக்கு எதிராக கொள்கையுடையவர்களுடன் (எதிரிக்கு எதிரி நண்பன் என) கை கோர்க்கும் அவல நிலையில் எவருக்கும் வளையாது தூய்மையை நிலை நாட்டும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
எந்த அரசு வந்தாலும் தவறை சுட்டிக் காட்டும் முதுகெலும்புடன், இடஒதுக்கீட்டிற்காக வரலாறு கண்டிராத போராட்டங்களை நடத்தி, முஸ்லிம்களக்கு இறைவனின் நாட்டத்தால் இடஒதுக்கீடு பெற்றுத் தந்து 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்த தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு நிலைப்பாடுகளை எடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் மீது பெட்டி குற்றச்சாட்டுகள் வரும்போது, என் ஜமாஅத்தின் தலைமைக்குச் சொந்த இடம் இல்லையே என்றெண்ணியும், நிர்வாகிகள், தாஹிகள் பலர் ஏழ்மையில் இருப்பதை எண்ணியும், இவர்கள் பணத்தை எண்ண மாட்டார்கள் என உள்ளம் நெகிழ தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஊர் நீக்கினாலும், உறவினர் ஒதுக்கினாலும், சிறை பிடித்தாலும், அகற்றப்பட்டவர்கள் அவதூறு அள்ளி வீசினாலும் குர்ஆன் லி ஹதீஸ் என்ற கொள்கையைப் பற்றி பிடிக்கச் செய்த ஏக இறைவனிடம் நாங்கள் பிரார்த்திப்பதெல்லாம்… ஏகத்துவத்தை உயிர் மூச்சாகக் கொண்ட என் ஜமாஅத்திலேயே இறுதி மூச்சு உள்ளவரை இருந்து மரணித்துவிட வேண்டும் என்பதுதான். இதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக