தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 28.08.2009 அன்று வ.n.வ.த.மண்டல தலைமை அலுவலகத்தில்
‘சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மௌலவி அஸதுல்லா ஜமாலி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக காரைக்கால் நிரவியைச்சேர்ந்த திருமுருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார்.
முருகன் என்ற தன்பெயரை முஹம்மது ரியாஸ் என்று மாற்றிக்கொண்டார். நிகழ்ச்சிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் அல்கஸீம் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட இரண்டாம் ஆண்டு ரமலான் சிறப்பு மலர் புத்தகமும், ஃபித்ரா பற்றிய பிரசுரமும் இலவசமாக வழங்கப்பட்டது.
ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சிற்கான அனைத்து ஏற்பாட்டையும் TNTJ புரைதா கிளை சிறப்பான முறையில் செய்திருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக