அமெரிக்காவின் சர்வதேச சமய சுதந்திர கமிஷன் (United States Commission on International Religious Freedom - http://www.uscirf.gov/) நேற்று Aug 12, 2009 வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை, அது சமய சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய நாடுகளின் வரிசையில் (Watch List) வைத்துள்ளது.
இதற்கு குஜராத்தில் 2002 நடந்த குஜராத் படுகொலைகளையும் 2008 நடந்த ஒரிஸ்ஸா தாக்குதல்களையும் காரணம் காட்டியுள்ளது. இந்திய அரசு சிறுபான்மையினரை பாதுகாப்பதில் மெத்தனப்போக்கை கடை பிடிப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி வழங்கும் விஷயத்தில் சொற்பமாகவே நடந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் படுகொலை மற்றும் ஒரிசா தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அகதிகள் முகாம்களில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. குஜராத்தில் அரசே பக்கபலமாக நின்று குஜராத் படுகொலைக்கு உதவி செய்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தக்குற்றங்களில் ஈடுபட்டோரை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டோர் மிகக்குறைவு என்றும், குற்றவாளிகள் நீதி முன் கொண்டுவரப்பட்டதே அரிது என்றும் குற்றம் சாற்றியுள்ளது இந்த அறிக்கை.
மேலும் இந்த கமிஷன் இந்தியாவில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், சமய சிறுபான்மையினரை காக்கவும், மதக்கலவரங்களை தடுக்கவும் புதிய நடவடிக்கைகளை இந்திய அரசையும், அரசியல் இயக்கங்களையும் வலியுருத்தச்சொல்லி ஒபாமா அரசை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இந்த அமெரிக்க சர்வதேச சமய சுதந்திரக் கமிஷன், தனித்து இயங்கக்கூடிய, நடுநிலமையான அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட கமிஷன் ஆகும்.
இது இந்தியாவின் சிறுபான்மையினர் விஷயத்தில் காட்டிய மெத்தனப்போக்கிற்கு சர்வதேச சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்ட பெரிய அவப்பேராகும். இதற்கு இந்திய அரசு என்ன பதில் அளிக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக