இந்த வருடத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதை ஆதாரத்தோடு ஒரு தனியார் தொலைகாட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தி உள்ளது. அத்தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்ட ஆதாரத்தில் பெரும்பாலான தனியார் ஹஜ் சேவை நிறுவனத்திற்கு 150 ஒதுக்கீடுகளும் (சராசரியாக தனியார் நிறுவனங்களுக்கு 165 ஒதுக்கீடு) , அல்ஹிந்து (http://www.alhindonline.com/) எனப்படும் கேரள ஹஜ் நிறுவனத்திற்கு மட்டும் மிக மிக அதிக அளவில் சராசரியை விட பதினொரு மடங்குக்கும் மேலாக 1700 ஒதுக்கீடுகளும் தரப்பட்டுள்ளது பட்டவர்தனமாகியுள்ளது.
மேலும் பல சேவை நிறுவனங்களுக்கு ஹஜ் கோட்டாக்களே வழங்கப்படவில்லை என்பதால் அந்த நிறுவங்கள் புகார்கள் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சவுதி அரசாங்கம் ஒரு நிறுவனத்திற்கு 600௦௦ ஒதுக்கீட்டிற்கு மேல் வழங்கப்படக்கூடாது என்று இருந்தும் 1700 ஒதுக்கீடு கொடுத்தது பதிலளிக்கப்படாததாகவே உள்ளது.
ஆதாரம்:
இது பற்றி தற்போதய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், இதைப்பற்றி ஒய்வு பெற்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்படும் என்பதை ஒப்புக்கொண்டாலும், தற்போது ஹஜ்ஜுக்கான வேலைகளை செய்யவேண்டியுள்ளதால் அதற்க்கு குறைந்த காலங்களே உள்ளதால் (சவுதி அரசு ஹஜ் பயணிகளுக்கு விசா கட்டாயப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது) ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற மழுப்பலான பதிலைத்தந்துள்ளார்.
மேலும், இதற்க்கு முன்னால் மத்திய மந்திரி இ. அகமது காரணம் என்று நம்பப்படுகிறது ( இவரும் கேரள மாநிலத்தைச்ச்சர்ந்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்) , அனால் அதை மறுத்துள்ள அவர் அதே நேரத்தில் அல்ஹிந்து நிறவனத்தின் சேவை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
அல்ஹிந்து நிறுவனத்தில் ஒரு ஹஜ் யாத்ரிகருக்கு 2 லட்சத்திற்கும் மேல் வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது (இந்த வருடம் மொத்தம் ஏறக்குறைய 35 கோடி வசூலிக்கலாம் அல் ஹிந்து நிறுவனம்). ஹஜ் கம்மிட்டியில் விண்ணப்பித்து தொடர்ந்து 4, 5 வருடங்கள் ஏமாறுபவரும் இன்னும் உண்டு என்னும் வேலையில் இது போன்ற புனித காரியங்களிலும் அரசு மக்களிடம் விளையாடுவது முஸ்லிம்களை மிகவும் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அரசு இனியாவது ஹஜ் கம்மிட்டியை ஒழுங்கு படுத்துமா?…
செய்தி: அல்மதராஸி
(இணையதள செய்திளாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக