வியாழன், 8 அக்டோபர், 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ? இது எந்த அளவுக்கு உண்மை?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?




எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர்.மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)

புதுமடம் கிளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக