கடந்த 13.09.2009 அன்று காஞ்சி மாவட்டம் பட்டூரில் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்வியின் அவசியம் பற்றி திரண்டிருந்த இளைஞர் பட்டாளம் உணரும் வகையில் எடுத்து கூறப்பட்டது.மாலையில் நோன்பு திறந்த பின் இறைவனை நினைவு கூற மஃரீப் தொழுகையும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இஸ்லாத்தை சரியான முறையில் பின் பற்றாவிட்டால் ஏற்படும் இன்னல்களை கூறும் வண்ணம் ஸஹாபாக்களின் தியாகங்களை எடுத்து கூறிக் கொண்டிருகும் போது திடீரென மாடியில் கூட்டம் சற்று கூடியது. பின்னர் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் ஒலித்தது. என்ன பிரச்சினை என்று பார்க்கும்போது வீட்டின் வாயிலில் சுமார் 300க்கும் மேற்ப்ட்ட பேர் திரண்டிருந்தனர்.வீட்டின் முன் திரண்டிருந்தவர்கள் மாடியில் ஏறத் தொடங்கினர். மாடியில் இருந்தவர்வர்கள் வெறித்தனமாக தாக்கவும் தொடங்கினர். ஒலி பெருக்கி மற்றும் அது சம்பந்தமான கருவிகளை வெறித்தனமாக அடித்து நொறுக்கினர். அதை தடுக்க சென்ற டி.என்.டி.ஜே சகோதரர்களையும் வெறித்தனமாக தாக்கினர்.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மது அருந்தி வந்துதான் இந்த செயலில் ஈடுபட்டனர். அதை நாம் கண்கூடாக காண முடிந்தது. அங்கு பயானில் கூறப்பட்டதோ இறைவனைப் பற்றிய போதனைகள். ஆனால் வந்திருந்தவர்கள் டி.என்.டி.ஜேவைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் எனவும் விபச்சாரம் செய்கிறார்கள் எனவும் வாய் கூசாமல் இறைவன் ஒருவன் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதற்கு அஞ்சாமலும், மறுமைக்கு அஞ்சாமலும் தகாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.இதுமட்டுமல்லாமல் பள்ளிவாசலில் இமாமாக இருப்பவர், மக்களிடத்தில் இஸ்லாத்தை எடுத்து கூறுபவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டபோது உண்மையில் இவர் இறைவனுக்கு அஞ்யவரா என்பதும், அவர் செய்த அராஜகத்தை படம் பிடிக்கும்போது தனது கீழாடையை தூக்கிக் காட்டியதும் மிகவும் கேவலமான செயலாகும். இவர்களெல்லாம் குர்ஆன் ஹதீஸுக்கு அஞ்சியவர்களா என்று கேட்கும் அளவுக்கு மது அருந்தி விட்டு மிகவும் கேவலமாக நடந்து கொண்டனர்.இந்நிலையில் இந்த அநியாய அக்கிரமங்களை பற்றி காவல்துறையின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் வசைமாறிப் பேசியவர்கள் செங்கற்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யாமல் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உங்களுக்குள் ஏன் அடித்து கொள்கிறீர்கள் என்று கூறினர்.சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் இப்பிரச்சினையை ஆர்.டி.ஒ விசாரனைக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. தாக்குதல் தொடுத்த சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறப்படும் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இவர்கள் சேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் மேலை நாஸர் ஆகியோரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் டி.என்.டி.ஜே தரப்பில் 15 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.இந்த பிரச்சனையில் மாநில டி.என்.டி.ஜே நிர்வாகமும் மிகவும் கவனிப்புடணும், உறுதுணையாகவும் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
P
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக