திங்கள், 30 நவம்பர், 2009

மழையும், ஹஜ் பயணிகளின் கண்ணீரும் நிறைத்த அரஃபா பெருவெளி


Mideast Saudi Arabia Hajj
அல்லாஹ்வுடைய அளப்பெருங்கிருபையால், 30 இலட்சத்திற்குட்பட்ட ஹஜ் பயணிகள் கடந்த 26.11.2009 வியாழன்று (சவூதி பிறை 9) , அரஃபா பெருவெளியில் கூடினர். பிறை 8-இல் பொழிந்த கனமழையினால், மக்கா –தங்கியிருந்த கூடாரங்கள், நடைபாதைகள், சாலைகள் மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உதவியுடன் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டன. எந்த ஹஜ் பிரயாணிகளும், அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள், ஹோட்டல்களிலிருந்து மாற்றப்படாமல், மீட்புப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக, பிறை 9 -இல் அரஃபாவில் கூடி, அல்லாஹ்வின் அருளையும், பாவ மன்னிப்பையும் ஹஜ் பிரயாணிகள் வேண்டினர். சவூதி அரேபியாவின் முஃப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் அரஃபா பெருவெளியில் சிறப்புரை ஆற்றினார்.
முஸ்லிம்கள் அனைவரையும், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுமாறு அறைகூவல் விடுத்தார். அனைத்து வகையிலான தீவிரவாதத்தையும் இஸ்லாம் எதிர்க்கிறது; ஒரு சிலரின் தூண்டுதலுக்கு அப்பாவி முஸ்லிம்கள் பலியாகக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
பிறை 9-இல், ஹஜ் பிரயாணிகள் அனைவரும் அரஃபா பெருவெளியில் கூடியிருக்கும் போது, வழக்கமாக காஃபாவின் மேல் போர்த்தியுள்ள “கிஸ்வா” எனப்படும் உறை (Cover), மாற்றப்படும். இந்த வருடமும், சுத்தமான பட்டு மற்றும் தங்க இழைகளாலான கிஸ்வா போர்த்தப்பட்டது. இதன் மதிப்பு, சுமார் ரூ 25 கோடியாகும்.
27.11.2009 – பிறை 10 அன்று எந்த வித அசம்பாவிதமுமின்றி, ஜம்ராத்தில் கல் எறியும் கிரியை நடைபெற்றது. 
தமிழில் செய்தி: ரியாத் ஃபெய்ஸல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக