திங்கள், 30 நவம்பர், 2009

கடையநல்லூரில் நடைபெற்ற தியாகத் திருநாள் திடல் தொழுகை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!


DSC_0668DSC_0633DSC_0637
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நான்கு இடங்களில் திடலில் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் குளித்து விட்டு நறுமணம் பூசி இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல் காலை 6 மணி முதலே தொழுகைத் திடலை நோக்கி வரத்தொடங்கினர்

சரியாக 6.30 மணியளவில் மேலான்மைக் குழு உறுப்பினர் மௌலவி சைபுல்லா ஹாஜாஅவர்கள் ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் மக்களிடையே ஆற்றிய உரையில்…..
‘இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைக்கட்டளைக்காக தன்னையும், தன் குடும்பத்தாரையும் அர்ப்பணித்தார். மனிதன் சுயமரியாதைக்காரனாக வாழவேண்டும். கடவுளைத் தவிர வேறு எதற்கும் எந்த சக்தியும் இல்லை. கடவுள் நமது செயல்பாடுகள், எண்ணங்கள் அனைத்தையும் கண்காணிக்கின்றான். அவனுக்கு மட்டும் கட்டுப்படுவனே உண்மையான முஸ்லிம் ஆவான். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்திட வேண்டும் என்று அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். இபுறாகிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்துப் பலியிட இறைவன் ஆணை பிறப்பித்தபோது எந்தத் தயக்கமும் இன்றி அதை நிறைவேற்றத் துணிந்தார். அதை நினைவு கூறும் பொருட்டுதான் இன்று முஸ்லிம்கள் உயிர்ப்பிராணிகளை அறுத்துப் பலியிடுகின்றனர். அதன் மாமிசங்களை ஏழை, எளியோருக்கு வழங்கி தாமும் உண்டு மகிழ்கின்றனர். இந்தப் பண்பு ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஏற்பட வேண்டும் என்றார்.
இறுதியாக அவர் தன் உரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்யும் ஒவ்வொரு பெருநாள் இரவிலும் தர்ஹாவிற்குச் சொந்தமான யானையை அதன் பாகன் தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் திடலில் யானையை கட்டிப்போடுகிறான். இதுகுறித்து வனத்துறைக்கு புகார் செய்தும் பெருநாள் இரவே யானையை மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்தாத வனத்துறையை வன்மையாக கண்டித்தார்.

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளிவாசல் மைதானத்தில் இஸ்லாமிய கல்லூரிப் பேராசிரியர் அவர்களும்
பேட்டை பகுதியில் மஸ்ஜிதுல் அக்ஸா சார்பில் ரைஸ்மில் திடலில் சவுதி அரேபியா இஸ்லாமிய அழைப்பாளர் பஷீர் அகமது உமரி அவர்களும்
மக்காநகர் தவ்ஹீத் திடலில் எஸ். யூசுப் பைஜி அவர்களும்
பெருநாள் தொழுகையும் அதைத்தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.

கடையநல்லூர் நகர் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், முபாரக், அக்ஸா, மரியம் ஆகிய பள்ளிவாசலை சார்ந்த ஜமாத்தார்கள் பல்லாயிரக்கணக்கான பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு இறைவனுக்கு ஆடு, மாடுகளை அறுத்து பலியிட்டு அதன் மாமிசங்களை ஏழை, எளியோருக்கு வழங்கியதோடு தாங்களும் உண்டு மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக