ஒருவர் தனது தாய் மொழியில் அவரவருக்கு விருப்பமான சொற்களை பயன்படுத்தி குர்ஆன் ஹதீஸீக்கு முரணில்லாத வகையில் துஆ செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். மகிழ்ச்சியை தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரம்.
ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் பயன்படுத்தவே இல்லை. ஆனால் அப்படித்தான் நபிகள் நாயகம் பயன்படுத்தினார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்ல வேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பது தான் . அது ஒரு சுன்னத் என்ற நிலையை அடையாது.
யாரோ ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கிய ஒரு சொல் அனைத்து முஸ்லிம்களாலும் கடைபிடிக்கப் படுகிறது என்றால் இதை எப்படி சகிக்க முடியும். நபியின் இடத்தில் யாரையும் வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் அவரவர் மொழியில் தான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.(Courtesy:www.onlinepj.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக