புதன், 18 நவம்பர், 2009

டிசம்பர் - 6 ல் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ல் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

நெல்லை மாவட்ட பொதுக்குழுவில் டிசம்பர் 6 - ல் திருநெல்வேலி மற்றும் கடையநல்லூர் - ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என எடுத்த முடிவின் படி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் சீனாப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில மேலான்மை குழு உறுபினர் சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட துனைத் தலைவர் சகோ.ஜபருல்லாஹ், மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.அப்துந் நாசர், மாவட்ட துனைச் செயலாளர் சகோ.அச்சன்புதூர் சுலைமான், சங்கை பீர் முஹம்மது , அரசு நலத்திட்ட மாவட்டச் செயலாளர் சகோ.குறிச்சி சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சவூதி அரேபிய இஸ்லாமிய அழைப்பாளர் சகோ.பஷீர் உமரி சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு டிசம்பர் 6 போராட்டம் ஏன் ? என விளக்கினார்.
இக்கூட்டத்தில் டிசம்பர் 6 ல் மெயின் ரோடு நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.அதற்கான களப்பணியை இன்றிலிருந்தே துவங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
          இறுதியில் நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி நன்றி உரை நிகழ்த்தினார்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக