CAIRO— Nearly three million pilgrims flocked to the arid valley of Mina early on Wednesday, November 25, for the start of the soul-searching journey of hajj. "Labbaik Allahumma Labbaik" ("Here I am, my Lord, here I am"), chanted the faithful walking or boarding buses to Mina, five kilometers east of the holy city of Makkah. Pilgrims started hajj rites early Wednesday with the tawaf, the circling seven times of the cubic Kaaba in the centre of the Grand Mosque in Makkah. The faithful will spend the day, known as "Yawm at-Tarwiya," in prayers and meditation, sleeping the night in fire-proof tents. At dawn on Thursday, November 26, the sea of white-clad pilgrims will begin moving towards Mount `Arafat, where Prophet Muhammad (peace and blessings be upon him) delivered his last sermon 14 centuries ago. Standing on Mount `Arafat, about 15 km east of Makkah, before sunset marks the climax of hajj and pilgrims who fail to make it on time must repeat their pilgrimage in future. They will then return to Mina a day later for the animal sacrifice ritual, marking the start of the four-day `Eid Al-Adha. The pilgrims will also start as of Friday, November 27, the stone-throwing ritual. Pilgrims hurl seven pebbles from behind a fence or from the overhead Jamarat Bridge every day for three days at each of the three 18-meter-high concrete pillars symbolizing the devil. Satan appeared on the same site to Prophet Abraham, son Isma`il and wife Hagar, who each threw seven stones at him. Around three million pilgrims from over 160 countries are performing hajj this year. Every able-bodied adult Muslim -- who can financially afford the trip -- must perform hajj once in their lifetime. Safe Saudi authorities promised a safe hajj. "We will not allow any surprise attacks to occur because we have security plans devised on the basis of past experiences in serving pilgrims," said Interior Ministry spokesman Mansour Al-Turki. More than 100,000 security personnel have been deployed to secure the pilgrims in Makkah and Medina, in addition to 20,000 medical staff. The Jamarat Bridge is also being monitoring by 600 CCTV cameras, while the Grand Mosque and its surroundings are watched by 1,852 cameras. "More than 20,000 security men have been sent to Jamrat Bridge to control crowding and thus ensure safety of pilgrims," Al-Turki said. The authorities have banned the use of small vehicles in the holy sites. "The decision to ban small vehicles carrying less than 25 passengers is being implemented after studying it over the past two years," said the spokesman. "With the speed train project for the holy sites reaching its final stage of completion authorities have found that it is time to implement the ban on small vehicles." The Health Ministry has also confirmed taking necessary measures to ensure pilgrims' safety and avoid the spread of the swine flu virus. "There is no fear of a swine flu outbreak in hajj largely because of the early precautionary measures being taken to deal with a breakout," said spokesman Khaled Al-Mirghalani. All hospitals and medical centers in Makkah and the holy sites are fully prepared to receive flu cases. There are also well-laid plans to counter natural calamities such as heavy rains and floods, said Khaled Al-Habshi from the Red Crescent. |
திங்கள், 30 நவம்பர், 2009
Pilgrims in Mina for Hajj
மேலப்பாளையத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத் ஈத்கா திடலில் பெருநாள்தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மவ்லவி எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து, பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், “சிலை வழிபாடு கூடாது என்று உலகிற்கு உணர்த்துவதற்காக அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் தான் இந்தப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
நமது நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் பாழ்படுத்தப்படுகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடி ஆகும்.
இந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கும் ஒரு மாநிலத்தில் சிலைகளுக்காகவும் நினைவுச் சின்னங்களுக்காகவும் பத்தாயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது அம்மாநில அரசு. இதற்காக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிலை வழிபாடு கிடையாது. இதனால் மக்கள் வரிப்பணம் பாழாகாமல் பாதுகாக்கப்படுகின்றது. நாட்டிலும் செல்வம் செழிக்கின்றது” என்று கூறினார்.
இந்த சிறப்புத் தொழுகையில் சுமார் பத்தாயிரம் ஆண்களும், மூவாயிரம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, மாவட்டச் செயலாளர் சாதிக்,மஸ்ஜிதுர்ரஹ்மான் பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், தவ்ஹீத் ஜமாஅத் நகரத் தலைவர்எஸ்.பி. மைதீன்,செயலாளர் ரோஷன், பொருளாளர் நிவாஸ்உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கான ஏற்பாடுகளை மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
தொழுகை முடிந்த பின் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் எழுபது மாடுகள் மற்றும் ஆடுகளைக் குர்பானி கொடுத்து, சுமார் 7000 ஏழைகளுக்கு இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது.
மழையும், ஹஜ் பயணிகளின் கண்ணீரும் நிறைத்த அரஃபா பெருவெளி
அல்லாஹ்வுடைய அளப்பெருங்கிருபையால், 30 இலட்சத்திற்குட்பட்ட ஹஜ் பயணிகள் கடந்த 26.11.2009 வியாழன்று (சவூதி பிறை 9) , அரஃபா பெருவெளியில் கூடினர். பிறை 8-இல் பொழிந்த கனமழையினால், மக்கா –தங்கியிருந்த கூடாரங்கள், நடைபாதைகள், சாலைகள் மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உதவியுடன் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டன. எந்த ஹஜ் பிரயாணிகளும், அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள், ஹோட்டல்களிலிருந்து மாற்றப்படாமல், மீட்புப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக, பிறை 9 -இல் அரஃபாவில் கூடி, அல்லாஹ்வின் அருளையும், பாவ மன்னிப்பையும் ஹஜ் பிரயாணிகள் வேண்டினர். சவூதி அரேபியாவின் முஃப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் அரஃபா பெருவெளியில் சிறப்புரை ஆற்றினார்.
முஸ்லிம்கள் அனைவரையும், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுமாறு அறைகூவல் விடுத்தார். அனைத்து வகையிலான தீவிரவாதத்தையும் இஸ்லாம் எதிர்க்கிறது; ஒரு சிலரின் தூண்டுதலுக்கு அப்பாவி முஸ்லிம்கள் பலியாகக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
பிறை 9-இல், ஹஜ் பிரயாணிகள் அனைவரும் அரஃபா பெருவெளியில் கூடியிருக்கும் போது, வழக்கமாக காஃபாவின் மேல் போர்த்தியுள்ள “கிஸ்வா” எனப்படும் உறை (Cover), மாற்றப்படும். இந்த வருடமும், சுத்தமான பட்டு மற்றும் தங்க இழைகளாலான கிஸ்வா போர்த்தப்பட்டது. இதன் மதிப்பு, சுமார் ரூ 25 கோடியாகும்.
27.11.2009 – பிறை 10 அன்று எந்த வித அசம்பாவிதமுமின்றி, ஜம்ராத்தில் கல் எறியும் கிரியை நடைபெற்றது.
தமிழில் செய்தி: ரியாத் ஃபெய்ஸல்
டிசம்பர் 6 போராட்டம்: தொண்டி கிளையில் ஆட்டோக்களின் பின்புறம் போஸ்டர்கள்
டிசம்பர் 6 போராட்டம் குறித்து தொண்டி கிளை சார்பாக ஆட்டோக்களின் பின்புறம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது!
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்
ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து..
கடமையான தொழுகைக்குப் பின்..
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499
ஸஜ்தாவின் போது...
ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.
''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482
இரவின் கடைசி நேரத்தில்...
இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908
நோன்பாளி நோன்பு துறக்கும் போது...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்...
''பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521
போர்க்களத்தில்...
''பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540
ஜும்ஆ நாளில்...
''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக
கடையநல்லூரில் நடைபெற்ற தியாகத் திருநாள் திடல் தொழுகை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நான்கு இடங்களில் திடலில் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் குளித்து விட்டு நறுமணம் பூசி இறைவனுக்காக உண்ணாமல், பருகாமல் காலை 6 மணி முதலே தொழுகைத் திடலை நோக்கி வரத்தொடங்கினர்
சரியாக 6.30 மணியளவில் மேலான்மைக் குழு உறுப்பினர் மௌலவி சைபுல்லா ஹாஜாஅவர்கள் ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் மக்களிடையே ஆற்றிய உரையில்…..
‘இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைக்கட்டளைக்காக தன்னையும், தன் குடும்பத்தாரையும் அர்ப்பணித்தார். மனிதன் சுயமரியாதைக்காரனாக வாழவேண்டும். கடவுளைத் தவிர வேறு எதற்கும் எந்த சக்தியும் இல்லை. கடவுள் நமது செயல்பாடுகள், எண்ணங்கள் அனைத்தையும் கண்காணிக்கின்றான். அவனுக்கு மட்டும் கட்டுப்படுவனே உண்மையான முஸ்லிம் ஆவான். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்திட வேண்டும் என்று அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். இபுறாகிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்துப் பலியிட இறைவன் ஆணை பிறப்பித்தபோது எந்தத் தயக்கமும் இன்றி அதை நிறைவேற்றத் துணிந்தார். அதை நினைவு கூறும் பொருட்டுதான் இன்று முஸ்லிம்கள் உயிர்ப்பிராணிகளை அறுத்துப் பலியிடுகின்றனர். அதன் மாமிசங்களை ஏழை, எளியோருக்கு வழங்கி தாமும் உண்டு மகிழ்கின்றனர். இந்தப் பண்பு ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஏற்பட வேண்டும் என்றார்.
இறுதியாக அவர் தன் உரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்யும் ஒவ்வொரு பெருநாள் இரவிலும் தர்ஹாவிற்குச் சொந்தமான யானையை அதன் பாகன் தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் திடலில் யானையை கட்டிப்போடுகிறான். இதுகுறித்து வனத்துறைக்கு புகார் செய்தும் பெருநாள் இரவே யானையை மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்தாத வனத்துறையை வன்மையாக கண்டித்தார்.
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளிவாசல் மைதானத்தில் இஸ்லாமிய கல்லூரிப் பேராசிரியர் அவர்களும்
பேட்டை பகுதியில் மஸ்ஜிதுல் அக்ஸா சார்பில் ரைஸ்மில் திடலில் சவுதி அரேபியா இஸ்லாமிய அழைப்பாளர் பஷீர் அகமது உமரி அவர்களும்
மக்காநகர் தவ்ஹீத் திடலில் எஸ். யூசுப் பைஜி அவர்களும்
பெருநாள் தொழுகையும் அதைத்தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.
கடையநல்லூர் நகர் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், முபாரக், அக்ஸா, மரியம் ஆகிய பள்ளிவாசலை சார்ந்த ஜமாத்தார்கள் பல்லாயிரக்கணக்கான பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு இறைவனுக்கு ஆடு, மாடுகளை அறுத்து பலியிட்டு அதன் மாமிசங்களை ஏழை, எளியோருக்கு வழங்கியதோடு தாங்களும் உண்டு மகிழ்ந்தனர்.
மனத் தூய்மை
மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்த மனத்தூய்மை இன்று முழுமையாக மறையத் துவங்கியுள்ளது. அடுத்தவர் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற உலக நோக்கத்தை மையமாகக் கொண்டு மக்கள் செயல்படத் துவங்கியுள்ளனர்
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை படைத்த வனிடம் மட்டுமே கூ¬யை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும். அவன் கட்டளையிட்டதால் தான் இதைச் செய்கிறோம் என்ற எண்ணமும் இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இன்று திருக் குர்ஆனைப் படிப்பதும், படித்துக் கொடுப்பதும், தொழுவதும், தொழ வலியுறுத்துவதும் உலக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. தன்னை அறிஞனாகக் காட்டிக் கொள்வதற் காகவும், புகழுக்காகவும் இவற்றைச் செய்கின்றனர். படித்த கல்வியின் உண்மையான போதனையை எடுத்துச் செயல்படுத்துவதில்லை. மேலும் தர்மங்களைச் செய்பவர்கள், மற்றவர்கள் புகழ்வதற் காகவும் அதன் மூலம் சொந்த இலாபங்களை அடைவதற்காகவும் செய்கின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற் காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்¬க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)
மறுமை நாளை நம்பாதவனே, தான் செய்யும் தர்மங்களைச் சொல்¬க் காட்டுவான், அதன் மூலம் தொந்தரவு செய்வான் என்ற திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் இறை நம்பிக்கையாளனின் நடவடிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதை வல்ல அல்லாஹ் தெளிவு படுத்திக் காட்டியுள்ளான். இறையில்லத்தைக் கட்டிக் கொடுப்பது, அல்லது பொதுச் சேவை நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்குவது ஆகிய நற்காரியங்களைச் செய்து விட்டு அதன் மூலம் உலக ஆதாயங்களை எதிர்பார்ப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. தன்னைத் தலைவராக, அல்லது செயலாளராக அல்லது வேறு முக்கியப் பொறுப்புகள் தருமாறு கேட்பது, அல்லது தான் சொன்ன படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இவை இன்று நடக்கும் அவலங்கள். இவ்வாறு செய்பவர்கள் இறைவனின் கூற்றுப்படி நன்மையை இழந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. எவ்வளவு பெரிய கஷ்டமான காரியங்களைச் செய்தாலும் அதில் மனத்தூய்மை இல்லாமல் போனால் அந்தக் கஷ்டத்திற்கு வல்ல அல்லாஹ்விடம் மறுமை நாளில் எந்தப் பலனும் இல்லாமல் போய் விடும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகப் பெரிய தியாகமாக இருந்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் சம்பவத்தைப் பற்றி நபிகளார் இவ்வாறு கூறுகின்றார்கள். அமல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே! எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக் காகவும் அவனது தூதருக்காகவும் அமையுமோ அது அல்லாஹ்வுக் காகவும், அவனது தூதருக்காகவும் செய்த ஹிஜ்ரத்தாக அமையும். எவருடைய ஹிஜ்ரத் உலக நோக்கத்தைக் கொண்டதாகவோ, அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகவோ இருந்தால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதற்காகவே அமையும். (நூல்: புகாரி)
சொந்த நாட்டை விட்டு, குடும்பத்தை விட்டு நாடு துறந்து போனாலும் எண்ணம் சரியில்லை என்றால் அதற்கு மறுமையில் எந்தக் கூ¬யும் இல்லை என்பதைத் தெளிவுபட நபிகளார் கூறியுள்ளார்கள். எனவே நாம் செய்யும் அமல்களை இறைவனுக்காக மட்டும் செய்து மறுமையில் நிறைவான கூ¬யைப் பெறுவோம். அல்லாஹ் உங்கள் உடல்களையோ, உங்கள் உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளத்தையும் அமல்களையும் மட்டுமே பார்க்கிறான். (நூல்: முஸ்லிம்
நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை
எம். ஷம்சுல்லுஹா
இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.
ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்.
என்றைக்கு மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைவது மட்டுமில்லாமல், தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடைகின்றாரோ அன்றைக்கு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்து அவரிடம் குடிபுகுந்த பொறாமை குடிபெயர்ந்து அங்கு அமைதி குடியேறுகின்றது. நிம்மதி அங்கு கொடி கட்டிப் பறக்கின்றது.
ஒரு மனிதனுடைய அழகு, பணம், பதவி என்று ஆயிரம் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். உதாரணமாக ஒரு தனி மனிதனின் அழகை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு இளைஞனையும் அவன் பருவமடைந்ததும் அவனை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் பிரச்சனை அழகு தான். தன்னை விட அழகான ஒருவரைப் பார்த்து, இவனைப் போன்று முக வெட்டும் உடற் கட்டும் தனக்கு இல்லையே என்று தனக்குள்ளே பொருமுகின்றான்.
புழுங்கிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய அடி மனத்தின் ஆழத்தில் புதைந்து கொண்டு அவனை அமுக்கிக் கொண்டிருக்கும் சகதியைக் களைவதற்கு உலகத்தில் எந்த ஒரு மனோ தத்துவ நிபுணர் முன் வந்திருக்கின்றார்?
இவனை உருக்குலைய வைத்துக் கொண்டிருக்கும் இந்த உள்நோயைக் குணப்படுத்தி ஒற்றடம் கொடுத்து வருடி விட எந்த வாழ்வியல் நிபுணர் காத்திருக்கின்றார்? அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருமில்லை என்று அடித்துச் சொல்லி விடலாம்.
உளவியல் மற்றும் வாழ்வியல் வல்லுநரும் வழிகாட்டியுமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6490
நிச்சயமாக ஒருவன் தனக்கு மேலுள்ளவரைப் பார்க்கும் போது இத்தகைய பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து மீளவே முடியாத நிலைக்கு ஆளாவான். அதே சமயம் இவனை விட அழகு குறைந்தவர்களை ஓர் ஆயிரம் பேரையாவது அவன் காண முடியும். தன்னை விட அழகு குறைந்தவர்களைப் பார்க்கும் போது, இவர்களை விட இறைவன் நம்மை அழகாக்கி வைத்திருக்கின்றானே என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் – அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்கின்ற போது அவன் மன அளவில் பெரும் நிம்மதி அடைகின்றான்.
நிறத்தை எடுத்துக் கொள்வோம். இதுவும் அழகு என்ற வட்டத்திற்குள் வந்து விடும் என்பதால் இதைத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் இந்தப் பாதிப்பிற்குள்ளாகாத இளைஞரையோ, முதியவரையோ கூட நாம் காண முடியாது. எனவே இதை நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இத்தகையவர்கள் தங்களை விட நிறத்தில் குறைந்தவரைப் பார்க்கும் போது அவர்களை விட இவர்கள் நிறத்தில் நன்றாகத் தான் இருப்பார்கள்.
இவர்களை எல்லாம் விட கண்கள் இழந்தவர்களை, கைகள் இழந்தவர்களை, கால்கள் இழந்தவர்களைப் பார்க்கும் போது இந்த நிறம் என்பதெல்லாம் கடுகளவு கூட ஒரு குறையாகவே ஆகி விடாது. இப்படி ஊனமில்லாத உடல் உறுப்புகளை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றானே என்று மன நிறைவோடு அவனுக்கு நன்றி செலுத்திடுவார்கள். அவர்களுடைய மனதில் ஏற்பட்ட பாறை போன்ற கவலைகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கி விடும்.
இது மாதிரியே ஊனமுற்றவர்கள் தங்களுக்கு மத்தியில் நிறைவான எண்ணத்தை உருவாக்கிக் கொள்வதற்கு தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது மன நிம்மதி அடைவர். ஒரு கண்ணை இழந்தவர் இரு கண்களை இழந்தவரைப் பார்த்தும், இரு கண்களை இழந்தவர் கை, கால்களை இழந்தவரைப் பார்த்தும், ஒரு கையை இழந்தவர் இரு கைகளை இழந்தவரைப் பார்த்தும் ஆறுதல் அடைய வேண்டும்.
நிச்சயமாக இத்தகைய பார்வை தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை மறக்கடிக்கச் செய்வதுடன் அவர்களை தத்தமது எதிர்காலப் பணிகளில் தொய்வின்றி தொடரச் செய்கின்றது.
இதுபோல் நோயுள்ளவர்கள் தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது – நிச்சயமாக தங்களை விட அதிகமதிகம் நோய்களைச் சுமந்தவர்களைக் காண முடியும் – இத்தகையவர்களை ஒரு நோயாளி பார்க்கும் போது, நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விட ஆயிரம் மடங்கு குறைவானது, சொல்லப் போனால் இது நோயே அல்ல என்ற முடிவுக்கு வந்திடுவார். இதை நினைத்து அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி, தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து விட்டது என்ற நினைப்பை ஓரத்தில் வைத்து விட்டு, தன் வாழ்க்கை ஓர் இனிய வாழ்க்கை என்ற நல்லெண்ணத்தை நோக்கி வந்து விடுவார்.
மனைவியிடம் மன திருப்தி அடைதல்
இன்று நம்மில் பலரிடம் ஆட்டிப் படைக்கும் ஓர் அற்ப சிந்தனை, அழகிய பெண்களைப் பார்க்கும் போது, ச்ச! இதுபோன்ற ஒரு மனைவி நமக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கவில்லையே என்பது தான். இந்தச் சிந்தனை தலை தூக்குபவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இதே சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தனது மனைவியை விட அழகு குறைந்தவர்களைக் கருத்தில் கொண்டு மன திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான். இது போல் பெண்களுக்கும் சிந்தனை தோன்றலாம். அவர்களுக்கும் அரியதோர் அருமருந்தாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரை அமைந்திருக்கின்றது.
பொருளாதாரம்
இதுவரை அழகு, நிறம், ஊனம், நோய் போன்ற உடல் ரீதியிலான அருட்கொடைகளைப் பார்த்தோம். இப்போது பொருளாதார ரீதியிலான அருட்கொடைகளைப் பார்ப்போம்.
இதுவும் ஒரு தனி மனிதனைத் தாழ்வு மனப்பான்மைக்குக் கொண்டு செல்கின்றது. ஒரு குடும்பத்தை சீரழிவை நோக்கிக் கொண்டு செல்கின்றது. ஒரு நாட்டை நாசத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
ஒருவன் ஐநூறு ரூபாய் சம்பாதிப்பான். இவன் தனக்கு மேலுள்ளவரைப் பார்த்து பொறாமைப் படுகின்றான். தனக்கு இப்படி ஒரு வருவாய் இல்லையே என்று தனக்குள் வேகவும் செய்கின்றான். இப்படிப் பட்டவன் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குபவனைப் பார்க்கும் போது, அவனை விட தான் இரண்டு மடங்குக்கும் அதிகமாக சம்பாதிப்பதை நினைத்து ஆறுதல் அடைவான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்.
இது ஒரு தனி மனித விவகாரம் என்றால் ஒரு குடும்பம் என்று வருகின்ற போது அங்கு இந்த விவகாரம் பூதாகரமான ஒன்றாக ஆகி விடுகின்றது.
தன் பக்கத்து வீட்டுக்காரர் பெரிய மாளிகையில் வசிப்பார். அந்தக் குடும்பத்தைப் பார்த்து குடிசை வீட்டில் வாழும் பெண்மணி ஏக்கப் பெருமூச்சு விடுவாள். தன் கணவர் சாதாரண கிளர்க் வேலை தானே பார்க்கிறார் என்று வேதனைப் படுவாள். இப்படி கவலைப்படும் ஒரு பெண் செய்ய வேண்டிய காரியம், சென்னையில் ஒண்டுத் திண்ணையில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்து வருவது தான். தரைப் படை என்று நம்மால் கிண்டலாகச் சொல்லப்படும் இம்மக்களின் சமையல், படுக்கை, குளியல், துவையல் எல்லாமே சாலைகளில் தான். இத்தனைக்கிடைய இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றார்கள்.
கொட்டும் மழையிலும், கொளுத்துகின்ற வெயிலிலும் வானமே கூரையாகக் கொண்டு வாழும் மக்களை, கிளர்க்கின் மனைவி என்று வேதனைப் படும் இந்தப் பெண் பார்த்தால், தனக்கு இருப்பது குடிசை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அமையப் பெற்றிருப்பது பெரும் பாக்கியம் என்று கருதி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முன்வருவாள். தன் வாழ்வை நல்லதொரு வாழ்வு என்று சந்தோஷப்படுவாள். கோபுர வாழ்க்கையைக் கண்டு கொந்தளிப்புக்குள்ளாகாமல் குடிசை வாழ்வைக் கண்டு மன அமைதி பெறுவாள். இவ்வாறு தனக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது அவளது வாழ்வு நல்வாழ்வாக அதே சமயம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வாழ்வாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலான குடும்பங்களில் குழப்பங்கள் உருவாகக் காரணமாக அமைவது குடிசை வீட்டுப் பெண் அல்லது நடுத்தர வசதியுள்ள பெண் தன்னை விட பணக்காரப் பெண்ணைப் பார்ப்பதால் தான்.
அந்த வீட்டில் ரெஃப்ரிஜிரேட்டர் இருக்கின்றது, நம்மிடம் அதுபோல் இல்லையே! அங்கு வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர் எல்லாம் இருக்கின்றது நம்மிடம் இல்லையே! அவர்களிடம் கார் இருக்கின்றது, நம்மிடம் இரு சக்கர வாகனம் கூட இல்லையே என்று மன உளைச்சல் அடைகின்றாள் இந்தப் பெண்! தன்னை தன் கணவர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லவில்லை, அதனால் இவருடன் வாழ மாட்டேன் என்று மண விடுதலை வாங்கிச் சென்ற மனைவியர் கூட உண்டு. இத்தகைய பெண்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல் தங்களுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்க்கும் போது அவர்களது இதயத்தை ரணமாக்கிய வதை சிந்தனைகள் வந்த வழி தெரியாது பின்வாங்கிப் போய் விடும்.
இம்மையிலும் நன்மை! மறுமையிலும் நன்மை!
ஒவ்வொருவரும் தனக்குக் கீழுள்ளவரைப் பார்ப்பாராயின் தனி மனித வாழ்க்கை மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையும் இப்படிப்பட்ட குடும்பங்களைக் கொண்ட நாடும் சிறந்து விளங்கும். மேலும் இத்தகைய மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் மக்களாகத் திகழ்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இருக்க முடியாது.
தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கையில் பொறாமை ஏற்படுகின்றது. இதனால் இம்மையில் மட்டுமல்லாமல் மறுமையிலும் தண்டனைக்கு உள்ளாகின்றான். அதே சமயம் கீழுள்ளவர்களைப் பார்த்து தனக்குரியது நல்ல நிலை என்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது அது அவருக்கு மாபெரும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. தனக்கு ஏற்பட்ட சோதனையைப் பொறுத்துக் கொள்ளும் போது அதுவும் அவருக்கு நன்மையைப் பெற்றுத் தருகின்றது.
ஓர் இறை நம்பிக்கையாளரின் விவகாரத்தைப் பார்க்கும் போது அது ஆச்சரியத்தை அளிக்கின்றது. அவரது காரியம் அனைத்தும் நன்மையாகவே அமைகின்றது. இ(ந்தப் பாக்கியமான)து ஓர் இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது அவர் நன்றி செலுத்துகின்றார். அது அவருக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது. அவருக்கு ஓர் இடர் ஏற்படும் போது அவர் பொறுமையை மேற்கொள்கின்றார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் 5318
எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில், இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து, ஏற்பட்ட சோதனையில் பொறுமை காக்கும் போது மறுமையில் மாபெரும் பாக்கியம் கிடைத்து விடுகின்றது. இம்மையில் இந்த நன்றி உணர்வு நல்வாழ்க்கைக்கு அடிப்படையாகி வாழ்க்கை இனிமையாகி விடுகின்றது.
மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது இம்மையில் அல்லாஹ் தன் அருட்கொடையை அதிகரிக்கவும் செய்கின்றான். கீழ்க்கண்ட வசனம் அதை உறுதி செய்கின்றது.
நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது
(அல்குர்ஆன்14:7)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)