அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை அவனை வணங்குவதற்காக மட்டுமே படைத்திருப்பதாக தன்னுடைய திருமறையில் குறிப்பிடுகின்றான். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) கற்றுத் தந்த பிரகாரம் நாம் நடைமுறைப் படுத்தினோம் என்றால் நம்வாழ்வே வணக்கமாகிவிடும்.
இஸ்லாம் நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தந்துள்ளது. இது இறைவனால் வழங்கபட்ட மார்க்கம்தான் என்பதற்கு இது மிகச் சிறந்த சான்றாகும். அதன் அடிப்படையில் நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான நடைமுறைகளை பற்றிக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீ உன்னுடைய படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்.
நீங்கள் உறங்(கப் போகு)ம்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாள்பாழிட்டுவிடுங்கள்.தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பாணத்தையும் மூடிவையுங்கள். (மூடுவதற்கு எதுவும் கிடைக்காவிட்டால்) அதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்)
அறிவிப்பவர் .. ஜாபிர் (ர) நூல் ... புகாரி (5624)
அறிவிப்பவர் .. ஜாபிர் (ர) நூல் ... புகாரி (5624)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
”நிச்சயமாக இந்த நெருப்பு ஆபத்தானது ஆகும். எனவே நீங்கள் உறங்கச் செல்லும் போது விளக்கை அனைத்து விடுங்கள்.”
அறிவிப்பவர் அபூ மூஸா (ர) நூல் புகாரி (6294)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீ உன்னுடைய படுக்கைக்குச் சென்றால் தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூச் செய்து கொள்.
அறிவிப்பவர் பரா இப்னு ஆசிப் (ர ) நூல் புகாரி (247)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தில் மூன்றுமுறை விரிப்பைத் தட்டிவடுங்கள் .
அறிவிப்பவர் அபூஹீரைரா (ர) நூல் புகாரி (7393)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய ஆடையின் ஓரத்தில் பிஸ்மில்லாஹ் என்று (அல்லாஹ்வின் பெயரை) கூறி (மூன்று முறை) விரிப்பை (காலையில் எழுந்த) பின் அதில் என்ன நுழைந்திருக்கும் என்பதை அறியமாட்டார்
அறிவிப்பாளர் அபூஹீரைரா (ர) நூல் முஸ்ம் (4889)
கே.எம். அப்துந் நாஸிர், இஸ்லாமியக் கல்லூரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக