சனி, 22 ஆகஸ்ட், 2009
முக்கியச் செய்தி
இன்ஷா அல்லாஹ் இன்று முதல் தினமும் ஸகர் நேரத்தில்மெகா டீவியில் ஒளிபரப்பாக உள்ள மனித குலத்துக்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள் என்ற தொடர் உரை இரவு 12 மணி முதல் நமது இணைய தளத்தில் காணலாம்.
நேற்றைய நிகழ்ச்சியும் இன்றைய நிகழ்ச்சியும் இன்று காணலாம்
வெப் மாஸ்டர்
www.Onlinepj.com புதிய டைனமிக் வடிவம் சோதனை ஓட்டத்தில்..
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு தற்போது www.onlinepj.com பதிய டைனமிக் வடிவத்தில் சோதனை ஓட்டத்தில் வெளியாகியுள்ளது என்பதை நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்!
ஆபாச ஊடகத்ததால் வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது!
ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற நிலையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
ஆம். ஒன்பதே வயதான அந்த சிறுவன், தன்னுடன் விளையாடிய 6 வயது சிறுமியை, வீட்டில் அவர்களின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனரான சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிணையில் விடுவித்துள்ளனர்.
இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 376 (கற்பழித்தல்) பிரிவின் கீழ் அந்த சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்நிலையத்தில் ஒருநாள் இருந்த அவனை, சிறுவர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 10 வயதான மாணவர்கள் 3 பேர் சேர்ந்து, அவர்கள் படித்த பள்ளியைச் சேர்ந்த 4 வயதான மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஓரிரு தினங்களில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 9 வயதான சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.
இண்டோரா அருகே ஜலோரா மொஹல்லா என்ற இடத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்கு ஒன்றாக வருபவர்கள். பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுபவர்கள்.
கடந்த ஞாயிறன்று இதேபோல சிறுமியின் வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.
அப்போது திடீரென்று அந்த சிறுவன் குளியலறைக்குள் சிறுமியை இழுத்து, அந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி மறுத்த போதிலும் அடித்து பணிய வைத்துள்ளான்.
சிறுமி, சிறுவனை எதிர்த்துப் போராடியதன் காரணமாக சிறுவைனின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பியதும், சிறுமி அழுது கொண்டிருப்பதை அறிந்து விசாரித்துள்ளனர். சிறுமிக்கு இரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவனையும், சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே உனா என்ற இடத்தில் உள்ள சிறுவர்கள் நீதிமன்றத்தில் அந்த சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
பொதுவாக 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைப் பருவம் மாறாத ஒரு சிறுவன், தன்னுடன் விளையாடும் சிறுமியை பாலியல்ரீதியில் துன்புறுத்தத் தூண்டியது எது?
பெற்றோரின் அலட்சியப் போக்கு என்பதுடன், அவர்கள் வாழும் சூழல், பார்க்கும் காட்சிகள், பழகும் நண்பர்கள் என்று எண்ணற்றவற்றைக் கூறலாம்.
அதற்கேற்ப இன்றைய வளர்ந்து விட்ட, தொலைக்காட்சி ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் காட்சிகளும் பிஞ்சு மனதில் ந்ஞ்சை விதைக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?
இதற்கு ஒரே தீர்வு ஊடகங்கள் ஆபாசத்தை நிறுத்த வேண்டும். அல்லது நம்குழந்தைகளை அதை விட்டு நாம் காக்க வேண்டும்.
மங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்!
சனி, 15 ஆகஸ்ட், 2009
பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன வழி?
பன்றிக்காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும்… மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்ககப்படுவதுமான ஒன்று..
இன்ஷா அல்லாஹ்… இதைப்பற்றி முக்கியமான தகவல்களையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இந்தக்கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.
இதில் இடம் பெரும் தகவல்கள் உலக சுகாதார நிறுவனம் மான WHO விடமிருந்து பேறப்பட்டவையாகும்.
இன்றைய சூழலில் இதைப்பற்றி ஆராய்வதற்கு முன் இதிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொல்லாம் என்பதே முக்கியமாகும். எனினும் சிறு குறிப்பை அறிவது அவசியம் (இன்ஷா அல்லாஹ் தேவைப்பட்டால் இதைப்பற்றி மிக நீளமான கட்டுரை ஒன்றை பிறகு பகிர்ந்து கொள்வோம்).
இது முதன்முதலில் அமெரிக்க நாட்டில் இரு குழந்தைகளுக்கு இருப்பதாக மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது எனினும் இந்த நோயின் மூலம் மெக்சிகோ நாடு என்பதாகவே சொல்லப்படுகிறது (பார்க்க [6]). இது பன்றிப்பன்னையிலிருந்து தொற்றியதாகவே அறியப்படுகிறது. இந்த நோய் முதலில் அதிகம் பாதித்தது மெக்சிகோ நாட்டையே, அதன் பிறகு அமெரிக்க அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இன்றோடு இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரு லட்சம் ( approx. 1,87,830 - மேலும் உடனுக்குடனான தகவல்களுக்கு பார்க்க [5]).
இது மனிதக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நான்கு தாக்குதல் கிருமிகள் சேர்ந்ததாக புதுவகையான தாக்குதல் கிருமியாக தற்போதய ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது (பார்க்க [6]) . இது சுவசத்துளிகள் மூலமாக மனிதர்களுக்குள் பரவுவதாக அறியப்படுகிறது (பார்க்க [7-8]). இதற்கு மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (பார்க்க [7]), எனினும் சில நிறுவனங்கள் தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வருகின்றன (பார்க்க [2]). தற்போது Oseltamivir Or Zanamivir என்ற ஆண்டி-வைரல் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [7]) மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமிபளு (Tamiflu) மருந்து பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [1]).
இது குழைந்தைகளை அதிகமாக பாதிக்க கூடியதாக உள்ளது. வயதானவர்களுக்கும் அதிகம் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியதாக உள்ளது. மேலும் இந்நோய் ஆஸ்த்மா, உடல் பருமனானவர்கள், நுரை ஈரல், கிட்னி, ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது பரவ அதிக வாய்ப்புள்ளது (பார்க்க [3]). இந்தக்கிருமியின் பாதிப்பு ஆரம்பத்தில் அவ்வளவாக தெரியாது, சாதரண காய்ச்சல், ஜல தோசம், உடல் வலி, வயிற்று வலி போன்று தான் இருக்கும். இதற்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (தடுப்பு மருந்துகள் இல்லை எனவே கூறலாம் - பார்க்க [7]).
இப்படிப்பட்ட நோயின் அறிகுறி அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இப்போது பாப்போம் (இது உலக சுகாதார அமைப்பின் இனைய தளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது –
நோயின் அறிகுறி:
* சாதரண நோய்க்கும் H1N1 க்கும் வித்தியாசம் காண முடியாது.
பொதுவான அறிகுறிகள்:
* காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி, தொண்டை வலி மற்றும் அரிப்பு, மூக்கொழுகுதல்.
மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த நோயை உறுதிப்படுத்த முடியும்.
நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது:
* அதிகமதிகமாக துஆ செய்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
* இந்த நோயின் அறிகுறி தெரிபவரிடம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்
* மூக்கையும் வாயையும் தொடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும்
* கை சுத்தத்தை பேணவும், சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவவும் (கையை எவ்வாறு கழுவுவ வேண்டும் என்பதை பட விளக்கத்துடன் உலக சுகாதார நிறுவன ஆவணத்தைப்பார்க்கவும் - பார்க்க [9])
* உடல் நலம் குன்றியவர்களிடம் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்கவும்
* கூட்டமான இடங்களில் நிற்பதைத்தவிர்க்கவும்
* உங்கள் இருப்பிடத்தை காற்றோட்டமானதாக ஆக்கிக்கொள்ளவும்
உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால்:
* வீட்டிலேயே இருக்கவும்
* ஓய்வெடுக்கவும், அதிகமாக நீராகாரம் அருந்தவும்
* தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும், நீங்கள் கைக்குட்டையோ அல்லது அது போன்ற ஒன்றை தும்மும்போது பயன்படுத்தினால் அதை கண்ட இடங்களில் போடாமல், மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் அப்புறப்படுத்தவும்.
* முகமூடி அணிந்து கொள்ளவும்
* உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் சற்று நெருங்கிய தொடர்பை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்குப்பரவுவதைத் தவிர்க்கலாம்.
முக்கியமாக தவறாக நம்பிக்கை நம் மக்களிடையே காணப்படுகின்றது, N95 மற்றும் சில வகை முகமூடிகள் அணிவதால் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம் என்று, இது ஒரு தவறான நம்பிக்கை (பார்க்க [4]). உங்களுக்கு இந்நோய் இருந்து இது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இதைப்பயன் படுத்தவும்.
எல்லாம் வல்ல அர்ரஹ்மான் இந்நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றி அருள்வானாக,
References:
[1] WHO recommends Tamiflu in ’severe’ swine flu treatment, AFP: http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHsIlKD0CynlBXAg2wpltiGfm6Qg
[2] Cipla : http://www.xomba.com/cipla_has_launched_new_drug_against_swine_flu_where_virenza_available
[3] Independent: What you need to know about H1N1, http://www.independent.ie/health/swine-flu/what-you-need-to-know-about-h1n1-1855513.html
[4] Myth Busted: N95 Masks Are Useless at Protecting Wearers from Swine Flu, http://www.naturalnews.com/026160_preparedness_swine_flu_outbreak.html
[5] TheAirDB: http://www.theairdb.com/swine-flu/heatmap.html
[6] Wikipedia: http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic
[7] World Health Organization: http://www.who.int/csr/disease/swineflu/frequently_asked_questions/what/en/index.html
[8] World Health Organization: http://www.who.int/csr/resources/publications/Adviceusemaskscommunityrevised.pdf
[9] World Health Organization: http://www.who.int/gpsc/5may/How_To_HandWash_Poster.pdf
செய்தி: டாக்கடர் எஸ்.ஜாஃபர் அலி Phd (USA)
இந்தியா சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு தர தவறிவிட்டது’ அமெரிக்க கமிசன் அறிக்கை
அமெரிக்காவின் சர்வதேச சமய சுதந்திர கமிஷன் (United States Commission on International Religious Freedom - http://www.uscirf.gov/) நேற்று Aug 12, 2009 வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை, அது சமய சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய நாடுகளின் வரிசையில் (Watch List) வைத்துள்ளது.
இதற்கு குஜராத்தில் 2002 நடந்த குஜராத் படுகொலைகளையும் 2008 நடந்த ஒரிஸ்ஸா தாக்குதல்களையும் காரணம் காட்டியுள்ளது. இந்திய அரசு சிறுபான்மையினரை பாதுகாப்பதில் மெத்தனப்போக்கை கடை பிடிப்பதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி வழங்கும் விஷயத்தில் சொற்பமாகவே நடந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் படுகொலை மற்றும் ஒரிசா தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அகதிகள் முகாம்களில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. குஜராத்தில் அரசே பக்கபலமாக நின்று குஜராத் படுகொலைக்கு உதவி செய்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தக்குற்றங்களில் ஈடுபட்டோரை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டோர் மிகக்குறைவு என்றும், குற்றவாளிகள் நீதி முன் கொண்டுவரப்பட்டதே அரிது என்றும் குற்றம் சாற்றியுள்ளது இந்த அறிக்கை.
மேலும் இந்த கமிஷன் இந்தியாவில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், சமய சிறுபான்மையினரை காக்கவும், மதக்கலவரங்களை தடுக்கவும் புதிய நடவடிக்கைகளை இந்திய அரசையும், அரசியல் இயக்கங்களையும் வலியுருத்தச்சொல்லி ஒபாமா அரசை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இந்த அமெரிக்க சர்வதேச சமய சுதந்திரக் கமிஷன், தனித்து இயங்கக்கூடிய, நடுநிலமையான அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட கமிஷன் ஆகும்.
இது இந்தியாவின் சிறுபான்மையினர் விஷயத்தில் காட்டிய மெத்தனப்போக்கிற்கு சர்வதேச சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்ட பெரிய அவப்பேராகும். இதற்கு இந்திய அரசு என்ன பதில் அளிக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி உண்மை நிலவரம்
எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளிவாசல் உண்மை நிலவரத்தை பற்றி அந்த பள்ளியை தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைத்தவர்கள் நேரடியாக அளித்த பேட்டி மற்றும் விளக்கம்!
விடியோவை ப்ளே செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2009-ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லஹா
மேகா டிவியில் ரமளான் மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை
மணிகுலத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள நன்மைகள்
சிறப்புரை
மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன்
பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கிளையின் சார்பாக பொள்ளாச்சி மஹாராஜாமஹாலில் 02.08.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-மணிக்கு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத்தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாபிஅவர்கள் மக்களின் கேள்விக்கனைகளுக்கு அழகான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலளித்தார்கள்.
இரவு 9-மணி ஆனபின்பும் மக்கள் ஆவலோடு இருந்தும் நிகழ்ச்சியை தொடரமுடியாமல்போனதுதான் வருத்தத்தை ஏற்படுத்தியது அப்பகுதி மக்களுக்கு.பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்
காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி தலைமைதாங்கினார்கள், நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் முன்நிலை வகித்தனர்.
பஜூலுல்லஹா அவர்கள் இறைவனின் நினைவில்லை என்ற தலைப்பிலும் அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) அவர்கள் வரதட்ச்சனை ஒர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) அவர்கள் சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்