திங்கள், 7 டிசம்பர், 2009

நாகர்கோவிலில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்


CIMG0524CIMG0551CIMG0559
பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதிபதி சச்சார் கம்மிட்டி அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்ட மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்க கூட்டு சதி செய்த, சம்மந்தபட்ட 69 குற்றவாளிகளை தூக்கில் போடக்கோரியும், பாபர் மஸ்ஜித் நிலம்; முஸ்லீம்களிடம் உடனடியாக ஒப்படைக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தியும்; நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இறைவன் அருளால் நடந்தேறியது. இவ்வாற்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர்நூருல் அமீன் தலைமை தாங்கி கண்டன கோசம் எழுப்பி துவங்கி வைத்தார். மாநில செயலாளர் காஜா நுஹ்; கண்டன உரையாற்றினார். இவ் ஆர்பாட்டத்தில்ஆண்கள்,பெண்கள் உட்பட   750க்கும் மேர்ப்பட்டோர்  கலந்து கொண்டனர்.

மேலும் இவ் ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அஹமத் கபீர், பொருளாளர்அப்துல் ஹமீது, துணைச் செயலாளர்ஜின்னா,துணை தலைவர் நாசர்,மருத்துவ அணிச் செயலாளர் ஜாஃபர் மற்றும் மாணவர் அணி, அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.   அல்ஹம்துலில்லா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக