திங்கள், 21 செப்டம்பர், 2009

இந்த ஆண்டு TNTJ மாணவரணி 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் இந்த ஆண்டு நமது TNTJ மாணவரணி தமிழகத்தில் 65 இடத்திலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 இடத்திலும் இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது (இடங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), மொத்தம் 22 மாவட்டங்களில் 67 இப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது(மாவட்டங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது), அல்ஹம்துலில்லாஹ்,

இப்தார் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் விபரம்


1. தாம்பரம்,
2. அறந்தாங்கி,
3. காரைகுடியில்,
4. இராம்நாடு,
5. பரங்கிப்பேட்டை,
6. பெங்களூர் (white field)
7. புது மடம் (இராமநாதபுரம் மாவட்டம்)
8. இருமேனி (இராமநாதபுரம் மாவட்டம்)
9. மண்டபம் (இராமநாதபுரம் மாவட்டம்)
10. ஆராம்பண்ணை (தூத்துகுடி மாவட்டம்)
11. வலங்கைமான் (தஞ்சை மாவட்டம்)
12. ஆடுதுரை அவனியாபுரம் (தஞ்சை மாவட்டம்)
13. புது வயல் (சிவகங்கை மாவட்டம்)
14. இராஜகம்பீரம் (சிவகங்கை மாவட்டம்)
15. தேங்காய் பட்டினம் (குமரி மாவட்டம்)
16. மந்தாரன் புதூர் (குமரி மாவட்டம்)
17. புளியந்தோப்பு (சென்னை)
18. ஆலங்குடி (புது கோட்டை மாவட்டம்)
19. கரம்பங்குடி (புது கோட்டை மாவட்டம்)
20. சிவகாசி
21. கீழக்கரை
22. KG ஹள்ளி (பெங்களூர்)
23. பனை குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)
24. திட்டுவிளை (குமரி மாவட்டம்)
25. நாகபட்டினம்
26. பல்லாவரம்
27. வந்தவாசி (திருவண்னாமலை மாவட்டம்)
28. கானத்தூர் (காஞ்சி மாவட்டம்)
29. கல்ப்பாக்கம்
30. செய்யுதுங்கநல்லூர் (தூத்துகுடி மாவட்டம்)
31. பட்டாபிராம் (திருவள்ளூர் மாவட்டம்)
32. ஆழ்வார்திருநகர் (திருவள்ளூர் மாவட்டம்)
33. சன்னாபுரம் (தஞ்சை மாவட்டம்)
34. ஐயம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)
35. இளையான்குடி
36. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)
37. போத்தனூர் (கோவை)
38. காஞ்சிபுரம்
39. புது வலசை (இராம நாதபுரம் மாவட்டம்)
40. கடையலுமூடு (குமரி மாவட்டம்)
41. MMDA காலனி (சென்னை)
42. காட்டூர் (கோவை)
43. லெப்பைகுடிகாடு (பெரம்பலூர் மாவட்டம்)
44. ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
45. வண்ணார பேட்டை (சென்னை)
46. திருவண்னாமலை
47. திருப்பூர்
48. கூடுவாஞ்சேரி (காஞ்சி மாவட்டம்)
49. குன்றத்தூர் (காஞ்சி மாவட்டம்)
50. முத்து பேட்டை (திருவாரூர் மாவட்டம்)
51. ஆலந்தூர், (சென்னை)
52. மேலபாளையம்
53. புது கோட்டை
54. தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்)
55. சிவகங்கை
56. திருவல்லிகேணி
57. நாகூர்
58. தொண்டி (இராம நாதபுரம் மாவட்டம்)
59. தேவிபட்டிணம் (இராம நாதபுரம் மாவட்டம்)
60. தூத்துக்குடி
61. வழுத்தூர் (தஞ்சை மாவட்டம்)
62. சோழபுரம் (தஞ்சை மாவட்டம்)
63. மங்களத்தில் (திருப்பூர் மாவட்டம்),
64. ஜாம் பஜார் (சென்னை)
65. ஆசாத் நகர்(கோவை),
66. பட்டூர் (காஞ்சி மாவட்டம்)

67. சேப்பாக்கம் (சென்னை)

இப்தார் நிகழ்ச்சிகள் மாவட்ட வாரியாக விபரம்


1. இராமநாதபுரம் மாவட்டம்
2. தூத்துகுடி மாவட்டம்
3. தஞ்சை மாவட்டம்
4. சிவகங்கை மாவட்டம்
5. குமரி மாவட்டம்
6. வட சென்னை
7. தென் சென்னை
8. திருவள்ளூர் மாவட்டம்
9. காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
10. காஞ்சி (மேற்கு) மாவட்டம்
11. பெங்களூர்
12. புது கோட்டை மாவட்டம்
13. கோவை மாவட்டம்
14. பெரம்பலூர் மாவட்டம்
15. திருவண்னாமலை மாவட்டம்
16. கிருஷ்ணகிரி மாவட்டம்
17. கடலூர் மாவட்டம்
18. நாகை மாவட்டம்
19. திருவாரூர் மாவட்டம்
20. விருது நகர் மாவட்டம்
21. திருப்பூர் மாவட்டம்
22. நெல்லை மாவட்டம்

படம் சொல்லும் சேதி


pray-inside-water-1of3pray-inside-water-3of3
pray-inside-water-2of3

-அல்மதராஸி


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?

தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.


‍எம்.ஏ.ஹாஜி முஹ்ம்மது, நிரவி

கத்தரில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி


ifthar-photo

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது.
சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து ” ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது.

முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் .

அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.

இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?


இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

(அல்குர்ஆன் 34 : 6)

-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி


அப்பாவி மாணவர்களை கொலை செய்த மோடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர்கள்

அப்பாவி முஸ்லிம் மாணவர்களை அநியாயகமா கொலை செய்துள்ள மோடியை கண்டித்தும் மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் TNTJ கண்ட போஸ்டர்கள் ஒட்ட முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் பற்றிய முழு விபரத்திற்கு நமது இணையதளத்தில் வெளியான செய்தியை பார்க்கவும் இங்கே சொடுக்கவும்

ஆர்ப்பாட்டத்திற்கான போஸ்டர் வாசகங்கள்

மத்திய அரசே

அப்பாவி மாணவர்களை அநியாயமாக கொன்ற கொலைகாரன் மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்!

மத்திய அரசே கொiயாளி மோடியை உடனே பதவி நீக்கம் செய்

மோடியை கொலை வழக்கில் கைது செய்.


சனி, 5 செப்டம்பர், 2009

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் அது ஒரு போதும் அழ்ழாஹ்வால் வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்கின்ற அடிப்படையை மனதில் இருத்தியவர்களாக இரவுத் தொழுகை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.
தராவீஹ் என்றால் என்ன?
‘தர்வீஹதுன்’ என்றால் ஓய்வு என்று பொருள்படும். ‘தர்வீஹதுன்’ என்பதன் பன்மையே தராவீஹ் ஆகும். தராவீஹ் தொழுகை என்றால் ‘ஓய்வுத் தொழுகைகள்’ எனப் பொருள்படும். ஆனால், தராவீஹ் என்ற சொற்பிரயோகம் அல்குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளோ பயன்படுத்தப்படவில்லை.
எனவே, இதிலிருந்து தராவீஹ் என்ற பெயர் பிற்பட்ட காலத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவுத் தொழுகை தொடர்பாக அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளில்
1.கியாமுல் லைல் (இரவில் நிற்றல்)
2.ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
3. வித்ர் (ஒற்றபை;படை)
4.தஹஜ்ஜத் (விழித்தெழுந்து தொழும் தொழுகை)
என ஒரே தொழுகைக்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதனால் இந்த தொழுகைகளை வெவ்வேறு தொழுகைகள் என சில மார்க்க அறிஞர்கள் தவறாக விளங்கியுள்ளனர்.
ரமழானுக்கு என்று விஷேட தொழுகைகள் உண்டா?
நபிமொழிகளை ஆய்வு செய்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரழமான் அல்லாத காலங்களில் தொழுது வந்த 11 ரக்அத்களையே ரமழானிலும் தொழுதுள்ளார்கள். மாறாக, ரமழானுக்கு என்று எந்த விஷேட தொழுகைகளையும் கற்றுத் தரவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஏனைய மாதங்களை விட ரமழானில் தொழுவதற்கு அதிகமதிகம் ஆரவமூட்டியுள்ளார்கள்.
‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)
தஹஜ்ஜத்தும் தராவீஹும்
சில மார்க்க அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகை வேறு, தராவீஹ் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். ஆனால், அவர்களின் வாதம் தவறானது என பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றன.
‘ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்’ (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷிர் (ரழி), நூல்: நஸயீ-1606, அஹ்மத்-18402)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 11 ரக்அத்களை, இரவில் வெவ்வேறு நேரங்களில் தொழுதுள்ளார்கள் என்பதை மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
இரவுத் தொழுகையும், வித்ரும்
சில மார்க்க அறிஞர்கள் வித்ர் தொழுகை வேறு, இரவுத் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். இந்த வாதமும் தவறானதாகும்.
‘உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)
மேலுள்ள நபிமொழியில் வித்ர் என்கின்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவத னாலேயே ‘வித்ர்’ என்பது தனியானதொரு தொழுகை போன்று தோற்றமளிக்கின்றது.
‘வித்ர்’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றைப்படை’ என்று பெருளாகும். எனவே, குறித்த நபிமொழியை ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்’ என முழுமையாக மொழிபெயர்க்கும் போது இரண்டும் தனித்தனி தொழுகை என்கின்ற வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.
இரவுத் தொழுகையின் ரக்அத்கள் எத்தனை?
‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)
மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.
ஆனால், அன்னையவர்கள் ‘ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
தறாவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கின்ற தவறான வாதங்களும் தக்க பதில்களும்
தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்களது காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தோம்.’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ-833)
தக்க பதில்:
1.குறித்த செய்தியில் நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் சம்பந்தப்படவில்லை. மாறாக, உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நடந்ததாகவே குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.
2.குறித்த செய்தியில் ‘அம்ரு பின் அப்துழ்ழாஹ்’ எனும் இயற்பெயருடைய ‘அபூஉஸ்மான் அல்பஸரி’ எனும் ‘யாரென்று அறியப்படாதவர்’ இடம்பெறுவதால் இச்செய்தி ஆதாரபூர்மற்றதாகும். மேலும் ‘ஸாயிப் பின் யஸீத்’ அவர்களே நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் 11 ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கக் கூடிய செய்தி ஆதாரபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ‘மக்களுக்கு பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரழி) அவர்கள் கட்ளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத், நூல்: முஅத்தா-379)
தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்’ (அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ-4802, முஅத்தா-380)
தக்க பதில்: குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச் செய்தி ஆதாரபூர்வமற்றது.தவறான வாதம்: ‘அழ்ழாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் ரமழான் காலத்தில் ஜமாஅத்தாக இல்லாது இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூற்கள்: பைஹகீ- அஸ்ஸுனனுல் குப்ரா-4799, தப்ரானி-அல்முஃஜமுல் கபீர்-10ஃ86, தப்ரானி-அல்முஃஜமுல் அவ்ஸத்-2ஃ309, 12ஃ176, முஸன்னப் இப்னு அபீஷைபா-2ஃ164, முஸ்னத் அப்து பின் ஹமீத்-1ஃ218)
தக்க பதில்: குறித்த செய்தி ஆதாரபூர்வமற்றது.. மேற்குறித்த செய்தியை பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே, இச்செய்தியில் இடம்பெறும் அபூஷைபா எனப்படும் இப்றாஹிம் பின் உஸ்மான் என்பவர் இச்செய்தியை தனித்து அறிவிக்கின்றார். இவர் பலவீனமாவர் என்று குறிப்பிடுகின்றார்கள்.
மேலும், குறித்த செய்தியில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அடுத்து இடம்பெறக்கூடிய அறிவிப்பாளர் மிக்ஸம் என்பவராவார். மிக்ஸம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் ஹகம் என்பராவார். ஹகம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஷைபா எனப்படும் உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பவராவார். இவரைப்பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தைப் பற்றி, ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்ய மான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
‘இமாம் அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவுத் போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.. இவர் நம்பகமானவர் கிடையாது எனவும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது என்று இமாம் புஹாரி கூறியுள்ளார். இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.
இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால் இவரை விட்டுவிட வேண்டுமென நஸாயி, தவ்லாபி போன்றோர் கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். யாரும் இவர் குறித்து பேசுவதில்லை. இவரது செய்திகளை விட்டுவிட்டனர் என அபூஹாத்தம் கூறியுள்ளார். இவர் மதிக்கத்தக்கவரல்ல என ஜவ்ஸஜானி கூறியுள்ளார்.
இவரது செய்திகளை பதிவு செய்யக் கூடாதெனவும், இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல்வேறு செய்திகளை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என அபூஅலீ நைஸாபூரி கூறியுள்ளார். இவர் ஷுஹ்பா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் ஒருவர் என அல்அஹ்வஸ் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்-01, பக்கம்-125) எனவே, இது ஆதாரபூர்மற்ற செய்தியாகும்.மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றதே?
நாம் மார்க்க விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அழ்ழாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’(அல்குர்ஆன் 07:03) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் பாராயண நிகழ்வு, கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.
மேலும், தப்லீக் ஜமாஅத் பகிரங்கமாக செயற்பட அனுமதி கூட கிடையாது. இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.
இரவுத் தொழுகையும் புதுவழியும்
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்களும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்அத்களும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்அத்களுமாக, 11 ரக்அத்களை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்அத்களாக தொழுதுவருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,
‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அழ்ழாஹ்வும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொரு ரக்அத்கள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்துவது தொடர்பாக பின்வரும் நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.
‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் இரவுத் தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள்புரிவானாகhttp://www.tntj.nethttp://www.onlinepj.com

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி


சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி


இன்ஷா அல்லாஹ்,
சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
நாள் : வியாழன் இரவு 03-09-2009
நேரம் : இரவு 9:30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
சிறுவர்களுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி 9:30 - 10:30
தலைமையுரை :சகோதரர் முஹம்மது யூசுப் 10:00-10:25 வரை
சிறப்பு உரை :வெட்கம்
சகோதரர் முஹம்மது லாயிக் 10:30-11:10 வரை
சிறப்புரை : ஆசை
சகோதரர் முஹம்மது அலீ 11:15 - 12:00 வரை
சிறப்புரை ;பொறுமை
சகோதரர் முஹம்மது லாபிர் 12:00-12:40 வரை
பரிசு வழங்குதல்
நிறைவுரை : சகோதரர் அப்துல் கபூர்
ஸஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குழந்தைகள் பெண்களுக்கான தனி இட வசதி உண்டு
வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .தொடர்புகொள்க 5424109
அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் ......

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ? இது எந்த அளவுக்கு உண்மை?


? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?

! எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர்.மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)

புதுமடம் கிளை