சனி, 15 ஆகஸ்ட், 2009

2009-ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லஹா

மேகா டிவியில் ரமளான் மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை

மணிகுலத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள நன்மைகள்

சிறப்புரை

மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன்

பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்


திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!கோவையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கிளையின் சார்பாக பொள்ளாச்சி மஹாராஜாமஹாலில் 02.08.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-மணிக்கு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாநிலத்தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாபிஅவர்கள் மக்களின் கேள்விக்கனைகளுக்கு அழகான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலளித்தார்கள்.

இரவு 9-மணி ஆனபின்பும் மக்கள் ஆவலோடு இருந்தும் நிகழ்ச்சியை தொடரமுடியாமல்போனதுதான் வருத்தத்தை ஏற்படுத்தியது அப்பகுதி மக்களுக்கு.பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி தலைமைதாங்கினார்கள், நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் முன்நிலை வகித்தனர்.

பஜூலுல்லஹா அவர்கள் இறைவனின் நினைவில்லை என்ற தலைப்பிலும் அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) அவர்கள் வரதட்ச்சனை ஒர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) அவர்கள் சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்


கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையோ குர்ஆனிலிருந்து வெகு தூரமாகவே இருக்கிறது. ஆயினும் மேலை நாடுகளிலும் தூர கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமே வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தா என்றால் நிச்சயமாக இல்லை!
அருள்மறையாம் அல்-குர்ஆனின் அற்புத வசனங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டே ஏராளமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, தாம் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் தலையானதும் முக்கியமானதுமாக திருக் குர்ஆன் விளங்குகிறது. நாம் பேட்டி கண்ட பலரும் அல்-குர்ஆனே தாம் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்த நம்முடைய சகோதர, சகோதரிகளின் நிலையோ குர்ஆனைக் கூட ஓதத் தெரியாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதவேண்டிய மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
குர்ஆன் என்பது பட்டுத் துணியில் சுற்றி பரணியில் பத்திரமாக வைப்பதற்கோ அல்லது வீட்டில் இழவு (மரணம்) விழுந்தால் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து ஓதுவதற்காகவோ அருளப்பட்டதன்று!
அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 ல் கூறுகிறான்: -
“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”
அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நோக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சிந்தனை செய்து ஆராய்சி செய்யுமாறு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
இறைவன் கூறுகிறான்: -
“அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?” (4:82)
“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)
சாதாரண பாமர மக்களால் கூட புரிந்துக்கொள்ளும் எளிமையான முறையில் அல்-குர்ஆனை அருளியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
இஸ்லாமிய பெயர் தாங்கிய மத புரோகிதர்களை கூலிக்கு அமர்த்தி அல்-குர்ஆனை ஓதுவதால் இறந்தவருக்கோ அல்லது அவ்வாறு கூலி கொடுத்து ஓத வைப்பவருக்கோ இறைவன் மேற்கண்ட வசனங்களில் கூறிய நல்லுணர்வும் அல்-குர்ஆனைப் புரிந்துக் கொள்ளும் பாக்கியமும் எவ்வாறு கிடைக்கும்? கூலிக்கு ஆட்கள் வந்து ஓதி விட்டுப் போனால் நாம் எவ்வாறு அல்குர்ஆனின் வசனங்களை கவனித்து சிந்தித்து ஆராய முடியும்? மேலும் கூலிக்காக வந்து ஓதுபவர்களிடம் இன்று இந்த வீட்டில் என்ன சாப்பாடு கிடைக்கும்? எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் என்பதல்லாது அந்தப் புரோகிதர்கள் உண்மையில் இவ்வாறு ஓத செய்பவர்களின் இறந்த உறவினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றா நினைப்பார்?
அப்படியே அவர்கள் நன்மையையே நினைத்தாலும் கூட அது இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையில்லையே! மாறாக இஸ்லாத்தில் இல்லாத புதுமையான செயல்களைச் செய்த பாவம் அல்லவா கிடைக்கும்? ஏனென்றால் கூலிக்கு ஆள் அமர்த்தி குர்ஆன் ஓதும் பழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த சகாபாக்கள் காலத்திலோ இல்லாத, ஒரு பிற்காலத்தில் வந்தவர்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன செயலாகும்.
மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் பித்அத்துக்கள். பித்அத்துக்கள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அதற்கான கூலியை பிறரிடம் எதிர்பார்க்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தங்களின் சுனனில் அறிவிக்கிறார்கள் :
(இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி)) அவர்கள் குர்ஆன் ஓதும் ஒருவரை கடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம் (ஏதோ சிலதை தருமாறு) கேட்டார். அதற்கு அவர் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’. நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்:
“யாராவது குர்ஆன் ஓதினால் அதனைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். பிற்காலத்தில் ஒரு சமூகத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் (பலனை) எதிர்பார்ப்பார்கள்” ஆதாரம் : திர்மிதி.
மேற்கண்ட ஹதீஸின் படியும், கூலிக்கு ஓதுவது கூடாது என்பதும் அறியமுடிகிறது.
எனதருமை சகோதர, சகோதரிகளே! அல்-குர்ஆன் அருளப்பெற்றதன் காரணம் அறிந்து அதை பொருளுடன் படித்து வருவோமேயானால் அது கூறும் நற்பலன்களை இன்ஷா அல்லாஹ் நாம் பெற முடியும். திருமறையை நாம் பொருளுடன் ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகளை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்: -
- குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் - (42:52)
- குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது - (45:20)
- குர்ஆன் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது - (45:20 , 27:77)
- குர்ஆன் நேர்வழி காட்டுகிறது - (17:9 , 46:30 , 45:11)
- குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது - (27:2)
- குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது - (41:4 , 44:3)
- குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது - (50:8)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது - (50:8 , 81:27-28)
- குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது - (50:37)
- குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது - (41:3)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் - (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது - (86:13-14)
- குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் - (41:44)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீணான வார்த்தைகளைக் கொண்டது இல்லை - (86:13-14)
- குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை - (2:2)
- பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் - (2:2)
எனவே திருமறை கூறும் மேற்கூறிய நற்பலன்களை நாம் பெற வேண்டுமெனில் அதை பொருளுணர்ந்து நாம் படித்தால் தான் முடியுமே தவிர கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.
இறந்தவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் நன்மைகள் செய்து அவர்களுக்கு சேர்த்திட விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றையறிந்து அதன்படி நடந்தால் நமக்கும் நபிவழியைப் பின்பற்றிய நன்மைகள் கிடைப்பதோடு அல்லாஹ்விடம் சேர்ந்து விட்ட நமது உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நன்மைகள் கிடைக்கும்.
அதற்கு மாறாக மாற்று மதத்தவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக செய்கின்ற சடங்குகளைப் போல் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து குர்ஆன் ஓத வைத்தால் நாம் மேலே கூறப்பட்டுள்ள நற்பலன்களை இழந்து விடுவதோடு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி ஒழுகிய சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகளில்லாத பித்அத்துகளைச் செய்த பாவம் நமக்கு வந்து சேரும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்.
- குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நண்பனாக்கப்படுவான் - (43:36-39)
- அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் - (39:9)
- கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் - (34:6)
எனவே சகோதர, சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.

தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!

தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாமில் நடைபெற்ற மூன்றாவது மெகா இரத்த தான முகாம்!தம்மாம் TNTJ, அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலுடன் இணைந்து நடத்திய
மூன்றாவது மெகா இரத்த தான முகாம்கடந்த 07-08-2009 வெள்ளி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை அல்கோபர் கிங் பஹத் ஹாஸ்பிடலில் நடைபெற்றது.

நூற்றி முப்பதிற்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்ட சகோதரர்களில் 119 சகோதரர்களால் மட்டுமே இரத்தக் கொடை கொடுக்க நேரமிருந்தது மருத்துவமனை இரத்த ஆய்வக ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் விடுமுறையில் இருந்தபோதிலும் பணியிலிருந்த மிகக் குறைந்த ஊழியர்களும், அதிகமான அளவில் கலந்து கொண்ட சகோதரர்களின் ஆர்வத்தைப் பார்த்து மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு TNTJ இரத்தக் கொடையாளர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டி ஆரவமூட்டினர்

எதிர்பார்த்ததற்கும் அதிகமான அளவில் இரத்தக்கொடையளித்ததை எண்ணி மண்டல நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி பகன்றனர்

நியூ யார்க் நகர பள்ளிகளுக்கு பெருநாள் விடுமுறை: நியூ யார்க் மாநகர சபை தீர்மானம்

நியூ யார்க் நகர பள்ளிகளுக்கு பெருநாள் விடுமுறை: நியூ யார்க் மாநகர சபை தீர்மானம்இஸ்லாமியர்களின் மூன்று வருட கடின முயற்சிக்குப்பின், தற்போது நியூ யார்க் நகர மாநகர சபை இஸ்லாமிய பெருநாளான ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அள்ஹா விற்கு அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இது அங்குள்ள இஸ்லாமியர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. அங்கு தற்போது கிருத்துவ மற்றும் யூத பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதுவரை இஸ்லாமிய பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. வார நாட்களில் பண்டிகை வந்தால் குழந்தைகள் சீக்கிரமாக தொழுதுவிட்டு பள்ளிகளுக்கு விரைந்து ஓடும் காட்சி பரிதாபகரமானது. இந்த தீர்மானம் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அங்குள்ளவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

நியூயார்க் நகரில் சுமார் 12% இஸ்லாமிய மாணவர்கள் படிப்பதாக அங்குள்ள வழக்கறிஞர்களின் புள்ளி விபரம் கூறுகிறது. இதை இன்னும் மேயர் ப்ளூம்பெர்க் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் ஒப்புதல் அழிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் செய்தி: எஸ்.ஜாஃபர் அலி phd


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?

தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

.இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். உணவு, உடை அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ”நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.

அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். ”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ‘பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும். மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.

பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்! ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். ”பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை போடுவோமாக!

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலையைகத்தில் இன்று (8-8-2009) காலை 11 மணிக்கு எஸ்.பி பட்டிணத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர்முஹம்மது அல்தாஃபி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்கள். பிரபல முன்னனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து நிரூபர்களும் கேமரா மேன்களும் TNTJ மாநிலத் தலையைகத்தில் குவிந்தனர்.

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!

மாநிலத் தலைவர் நீரூபர்களிடம்:

எஸ்.பி பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை குறித்து விளக்கமளித்தார்கள். மேலும் சட்டத்திற்கு முரணாக அராஜகமாக நடந்து கொள்ளும் அரசையும் காவல்துறையையும் கண்டித்து முதற்கட்டமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17 ஆம் தேதி தமிழக முதல்வரை வீட்டை சுமார் 1 லட்சம் பேர் கூடி முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்கள்.