சனி, 27 ஜூன், 2009

80 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-வாசுதேவநல்லூர் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 7-6-2008 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 80 மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்ப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ? இது எந்த அளவுக்கு உண்மை?


? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?

! எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர். மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)

தொ(ல்)லைக் காட்சிகள்

தொ(ல்)லைக் காட்சிகள்
இந்தியாவில் சின்னத்திரையில் ஹிந்தி சேனல்களுக்கு அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான சேனல்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 14 தமிழ் சேனல்கள் உள்ளன. இது தவிர அந்தந்த ஊர்களில் கேபிள் டி.வி. இணைப்பு தருபவர்கள் தனியாக உள்ளூர் சேனல்களை நடத்தி வருகின்றனர்.மக்களைச் சிந்திக்க விடாமலும், நற்காரியங்களைச் செய்யவிடாமலும் தடுக்கும் முதல் சாதனமாக இந்தத் தொலைக்காட்சிகளே உள்ளன.
ஆரம்பத்தில் இலவச சேனல்களாக இருந்த பல சின்னத்திரைச் சேனல்கள், இன்று கட்டணச் சேனல்களாக மாறி உள்ளன. மக்களுக்கு இலவசமாக சில காலங்கள் உருப்படாத காட்சிகளைத் தந்து, அதில் அவர்களை அடிமையாக்கி, பின்னர் அவர்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கத் தீட்டம் தீட்டி செயல்படுகின்றன பல முன்னணி சேனல்கள்.
சமீபத்தில் இலவச சேனலாக இருந்த முன்னணி டி.வி. சேனல் ஒன்று, கட்டண சேனலாக மாற்றப் பட்டது. இதற்காக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தினர். அந்த டி.வி. சேனல், ஒரு வீட்டின் இணைப்பிற்கு மட்டும் 32 ரூபாய் கேட்பதாக கேபிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் மாதத்திற்குப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொண்டிருக்கிறது அந்த டி.வி.
சேனல்.கடுமையான கட்டண உயர்வை ஏற்று இன்றும் ஏராளமானோர் அந்த சேனல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல செய்திகள் நிறைந்திருந்தால் அதற்காக செலவழிப்பதில் தவறில்லை. முழுக்க முழுக்க சினிமா, சீரியல் என்று மக்களை அடிமைப்படுத்தி நல்ல செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் இவற்றிற்குப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டுமா?டி.வி. பார்ப்பதில் முத டம் வகிக்கும் பெண்களை நாடகத்தில் அடிமையாக்கி இப்போது அறுவடை செய்கிறார்கள்.
குறிப்பாக, பெரும்பாலான சின்னத்திரைச் சேனல்களில் மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் மிக மிகக் குறைவு தான். அதிலும் அந்த டி.வி.யை எடுத்துக் கொண்டால் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணி வரையும் தொடர் நாடகங்கள். அதில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் நாடகங்களும் அடக்கம்.
பெரும்பாலான நாடகங்கள் சமூகச் சீரழிவையே ஏற்படுத்துகின்றன. தவறுகள் எந்த விதத்திலெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த நாடகங்கள் நல்ல (?) வழி காட்டுகின்றனர். இதனால் கெட்டுப் போனவர்கள் ஏôரளம்.
இடையில் சில நிமிடங்கள் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் அந்த டி.வி. சேனல் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவான செய்திகள். அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்காத செய்திகள். நாட்டில் எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராக இருந்தால் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான செய்திகளை அதில் காணமுடிவதில்லை.
முழுக்க முழுக்க பயனற்ற நாடகங்கள், சினிமா, ஆபாசம், வன்முறைகள் நிறைந்த இந்தத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக எவ்வளவு கட்டண உயர்வையும் ஏற்க மக்கள் குறிப்பாகப் பெண்கள் தயாராக உள்ளனர்.
சின்னத்திரையில் வர்த்தக விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தைக் கண்டு வரும் முதலாளிகள், கட்டண அலைவரிசையாக மாற்றி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.தென் மாநிலங்களில் விளம்பரக் கட்டணம் கடுமையாக உள்ள ஒரே சேனல் அந்த டி.வி. மட்டுமே! வர்த்தக விளம்பரம் மூலம் கடுமையான வருமானம் கிடைத்தாலும் நடுத்தர வர்க்கத்தினர் மடியிலும் கை வைக்கத் துவங்கியுள்ளனர் அந்த டி.வி. உரிமையாளர்கள்.எந்தத் தொலைக்காட்சியாக இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான செய்திகளும் உண்மை நிலவரமும் நமக்குக் கிடைக்கும்.
கட்டணங்களை கடுமையாக உயர்த்தும் போது அந்த டி.வி. சேனல்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இது போன்ற கடுமையான கட்டண உயர்வு ஏற்படாது

வெள்ளி, 12 ஜூன், 2009

பேர்ணாம்பட் அருகே நடந்த விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட் வேலூர் TNTJ.

தீயினால் பாதிக்ப்பட்ட நெல்லிக்குப்பம் பகுதிக்கு நேரில் சென்று நிவாறன உதவிகள் வழகங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்.


தீயினால் பாதிக்ப்பட்ட நெல்லிக்குப்பம் பகுதிக்கு நேரில் சென்று நிவாறன உதவிகள் வழகங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்.

பிற அமைப்புகளுடன் இணைவது?

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, June 8, 2009, 9:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையுடன் அதில் எள் முனை அளவுக்கும் வளைந்து கொடுக்காம்ல் செயல்படும் இயக்கம் என்பதையும், இந்தத் தனித்தன்மை காரணமாகவே நமது ஜமாஅத் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக உள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் பொதுவான உள்ளூர் பிரச்சனைகளில் மற்றவர்களூடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டு அவ்வாறு செயல்பட்ட போது நமக்கு பின்னடைவு ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உண்ர்கிறோம்.

கொள்கையில் சமரசம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மற்றவர்கள் மார்க்க வரம்பையும் நாட்டின் சட்ட வரம்பையும் மீறும் போது அதை நாம் சுமக்கும் நிலமை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டு.

இதைக் கவணத்தில் கொண்டு இனி எதிர் காலத்தில் பிற இயக்கங்களுடன் சங்கங்களுடன் இணைந்து எந்தவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், தனித்தே அமைத்துக் கொள்ளுமாறும் மாவட்ட, கிளை நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.


'Duakkalin Thoguppu'

BZl×Ls GtTÓm úTôÕ

BZl×Ls GtTÓm úTôÕ ¸rdLôÔm ÕAûY J§]ôp @ûR ®Pf £\kRûR @pXôy Uôt\ôLj RÚYôu Fuß S©Ls SôVLm (^p) á±]ôoLs.

ARôWm: Øv-m 1525

اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

u]ô -pXô¶ Y Bu]ô BûX¶ Wô´îu, @pXôaýmU @K_ýoÉ À(F) ØÊT(B)(j)§ Y @d-l(F) Ä ûLWu ªuaô

BRu ùTôÚs :

SôeLs @pXôyÜdÏ D¬VYoLs. úUÛm SôeLs @Y²PúU §Úm©f ùNpTYoLs. Bû\Yô! F]Õ ÕuTj§tLôL ¿ á- RÚYôVôL. úUÛm BûR ®Pf £\kRûR TLWUôLj RÚYôVôL.

ARôWm: Øv-m 1525

ஞாயிறு, 7 ஜூன், 2009

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்



படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்


அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். ”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

”எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும். வேதனையை விட்டும் பாதுகாவல்

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் 8:33) பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது. மக்கள் செல்வமும், மழை நீர் வளமும் உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 71:10லி12) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன் 51:18) (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (அல்குர்ஆன் 3:17) இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, ”என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

”அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.” (பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளி ருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.) என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ர ), நூல் : புகாரி (6306)

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி), நூல் : முஸ்லிம் 931

 

வியாழன், 4 ஜூன், 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் ரஹ்மத் நகர் கிளை (பாளை )நெல்லை மாவட்டம்

பள்ளிவாசல் உள்ளே
வெளியே




.........................................அல்ஹம்துலில்லாஹ் ..........................................


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் ரஹ்மத் நகர் கிளை (பாளை )நெல்லை

வெளிவந்து விட்டது TNTJ.net இணைதளம் புத்தம் புதிய டைனமிக் வடிவத்தில்.... அல்ஹம்துலில்லாஹ்

பல்வேறு புதிய அம்சங்களுடன் TNTJ.net இணைதளத்தின் புதிய வடிவம் வெளிவந்துவிட்டது! ஓர் சிறந்த செய்தி களஞ்சியமாக.....முக்கியமான அம்சங்கள்முற்றிலும் டைனமிக் வடிவம்!தவ்ஹீத் மேட்ரிமோனில் (நேயர்கள் தாங்களே பதிவு செய்து கொள்ளலாம்)வேலைவாய்ப்பு தகவல் தேடல் வசதிநாளேடு பத்திரிக்கைகளில் இடம் பெறும் உலக மற்றும் தமிழக செய்திகள்!ஜமாஅத்தின் எதிர்வரும் நிகழ்ச்சிகளின் பட்டியல்!செய்திகளை மாவட்ட வாரியாக, பிரிவு வாரியாக பார்த்துக் கொள்ளும் வசதி!உணர்வு ஆன்லைன் E பேபர் புத்தம் புதிய வடிவில்!இன்னும் பல்வேறு அம்சங்கள்! visit www.tntj.net