கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்ல்ம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமூகம் கடைரிலையில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லீம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லீம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள் 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள் 4.4% பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லீம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லீம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
இதுதான் முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம் சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லீம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.
கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்\
பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லீம் சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லீம் இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லீம் இனைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லீம் சமுதாயம் இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லீம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லீம் கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லீம் சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லீம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது ஆர்.எஸ்.எஸ். இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லீம் மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே முஸ்லீம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்லிகளை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்
முஸ்லீம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லீம் சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :
முஸ்லீம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லீம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆ−ம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லீயாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹாராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், μர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லீம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்
சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்
அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லீம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடங்கள்
முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லீம்களை தனிமை படுத்தி முஸ்லீம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லீம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்
பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லீம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?
பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.
அப்படிஎனில் இதற்கு தீர்வுதான் என்ன? டி.என்.டி.ஜே மாணவர் அணி நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வை வழங்காது, எல்லோரும் நடைமுறைபடுத்தக்கூடிய எளிதில் முன்னேற கூடிய தீர்வை பார்போம்.
அனைத்து முஸ்லீம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.
இதை எளிதில் சொல்லிவிடலாம் ஆனால் எவ்வாறு எளிதில் நடைமுறைபடுத்துவது என்பதை காண்போம்.
1. இவை அணைத்தையும் சாதிக்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான வழிகாட்டுதல் இருந்தால் போதும்.
2. இந்த பணியை செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் பணியாற்றக்கூடிய ஷிர்க் வைக்காத தவ்ஹீத் வாதிகளாக இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் உதவியோடு எளிதில் சாதிக்கலாம்.
3. டி.என்.டி.ஜே மாணவர் அணி படிப்பை பொருத்தவரை Prekg முதல் Phd வரை உள்ள பெரும்பாலும் எல்லா படிப்புகளை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.
4. வேலை வாய்ப்பை பொருத்தவரை மாதம் ரூ. 8000 இருந்து 8 லட்சம் ரூபாய் வரை இந்தியாவில் சம்பாதிக்க உள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளது.
5. உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும். இந்த நுணுக்கங்களை டி.என்.டி.ஜே மாணவர் அணி நடத்தும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அறிந்துகொள்ளலாம்.
6. முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு அவர்களின் பெற்றோகளின் கல்வி அறிவின்மைதான் காரணம். டி.என்.டி.ஜே மாணவர் அணியில் பங்கு பெருவதின் மூலம் படித்த கல்வியாளர்களைக் கொண்டு முறையான சரியான வழிகாட்டுதல் வழங்குகின்றோம்.
7. படித்து முடித்தவர்கள் வேலை பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள Spoken English, Communication Development போன்ற பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துகின்றோம்.
8. 10லிஆம், +2 தேர்வுக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வழிவகை செய்கின்றோம்.
9. கல்வி கற்பது ஒவ்வொறு முஸ்லிமின் கடமை என்பதை போதித்து மார்க்க ரீதியாக கல்வியின் அவசியத்தை வழியுறுத்துகின்றோம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
மேற்சொன்ன காரியங்களை செய்ய பணம் தேவையில்லை உங்கள் ஒத்துழைப்பு போதுமானது உங்கள் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கல்வி வேலைவாய்ப்பு பற்றிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து டி.என்.டி.ஜே மாணவர் அணியை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் வழிகாட்ட தயாராக உள்ளோம்.
மாவட்டம் மற்றும் கிளைதோறும் டி.என்.டி.ஜே மாணவர் அணி இலவசமாக நடத்தும் சிறப்பு பயிற்சி முகாம்கள், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
உங்கள் பகுதியில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியர்களை கணகெடுத்து டி.என்.டி.ஜே தலைமைக்கு அனுப்புங்கள்.
உங்கள் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதியில் முகாமிட்டு சிறப்பு பயிற்சி அளித்து கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம்.
கல்வியிலும் பொருளாதாத்திலும் முன்னேற பணம் அவசியமில்லை அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும்.
மாணவ, மாணவியர்களே உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். உங்களை வளபடுத்திக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.
”’எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன் அறிந்தவன்.’ அல்-குர்ஆன்(8:53)